EPFO : இபிஎஃப்ஓவில் Date of Exit தேதியை அப்டேட் செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ!
Update Date of Exit in EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில், பயனர்கள் தாங்கள் பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பணியில் இருந்து விலகிய தேதியை இபிஎஃப்ஓவில் அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பணியாற்றும் கோடிக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) கணக்கு வைத்துள்ளதன் காரணமாக பல சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இபிஎஃப்ஓவில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அது அவர்களது பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிஎஃப் கணக்கில் நீங்கள் பணியில் இருந்து விலகிய நாளை (Date of Exit) அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்வது கட்டாயம்
பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் தாங்கள் பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்வது கட்டாயமாக உள்ளது. காரணம், ஒருவேளை ஊழியர்கள் தாங்கள் பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்யவில்லை என்றால், பிஎஃப் கணக்கு இருப்பு தொகைக்கும் அதற்கு சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக பிஎஃப் பணத்தை எடுக்க முடியாத சூழல் ஏற்படும். இந்த நிலையில் தான், பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்வது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : PAN Card : உங்கள் பான் கார்டு முடக்கப்படலாம்.. உடனே இத பண்ணுங்க!
பணியில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 - அதில் யுஏன் (UAN – Universal Account Number) எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
 - அதில் Manage என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் உள்ள Mark Exit என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 - பிறகு அதில் பணியில் இருந்து விலகிய தேதி Date of Exit மற்றும் அதற்கான காரணத்தை பதிவிட வேண்டும்.
 - பிறகு அப்டேட் என்பதை கிளிக் செய்து பிறகு ஒகே என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 
இதையும் படிங்க : முதல்முறை வீடு வாங்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.. என்ன என்ன தெரியுமா?
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி நீங்கள் பணியில் இருந்து விலகிய தேதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் அப்டேட் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.