கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பிக் டிக்கெட் லக்கி டிராவில் 49 கோடி மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை வென்று, ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடாகா மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த ஷாந்தனு ஷெட்டிகர், அபுதாபியில் நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திராம் பரிசை வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் இது சுமார் 49 கோடி ரூபாய் ஆகும். தற்போது ஓமனில் பணியாற்றி வரும் ஷாந்தனு, சமீபத்தில் அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார். அந்த டிக்கெட்தான் ஜாக்பாட் வென்றதாக அறிவிக்கப்பட்டது.