AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“உலகின் முக்கிய குரலாக திகழும் இந்தியா”.. மோடியை பாராட்டிய உலக தலைவர்கள்

உலக தலைவர்களின் இந்த வாழ்த்து செய்திகள், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் சர்வதேச மதிப்பு மற்றும் செல்வாக்கு உயர்ந்துள்ளதற்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பிராந்திய சக்தியாக இருந்த இந்தியா, தற்போது உலக பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் துறைகளில் தவிர்க்க முடியாத முக்கிய நாடாக உருவெடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“உலகின் முக்கிய குரலாக திகழும் இந்தியா”.. மோடியை பாராட்டிய உலக தலைவர்கள்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Jun 2026 09:02 AM IST

ஜூன் 10, 2026: இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி புதிய வரலாற்றை படைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இந்த சாதனைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உள்நாட்டு நிர்வாகத்தில் அவர் மேற்கொண்ட மாற்றங்களையும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய விதத்தையும் உலக தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

பிரதமர் மோடியின் சாதனைகள்:

2014ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, 2024ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவரது தலைமையில் இந்தியா பொருளாதார மற்றும் சமூக துறைகளில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்ததுடன், சர்வதேச தூதரக மேடைகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், “குளோபல் சவுத்” நாடுகளின் முக்கிய குரலாக இந்தியா உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலக தலைவர்கள் வாழ்த்து:

முதலாவதாக வாழ்த்து தெரிவித்தவர்களில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவும் ஒருவர். ஜூன் 8ஆம் தேதி அவர் எழுதியிருந்த கடிதத்தில், “இந்த சாதனை என்பது நீங்கள் பதவியில் இருந்த ஆண்டுகளின் அடையாளம் மட்டுமல்ல; உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் தலைமையில் மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் வெளிப்பாடாகும்” என குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு கொள்கையில் இலங்கைக்கு தனி முக்கியத்துவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் இதுவரை நான்கு முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் அண்மையில் 2025 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பயணத்தின் போது, இலங்கையின் உயரிய சிவில் விருதான “மித்ர விபூஷண” விருது அவருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய உதவி, இரு நாடுகளின் உறவில் முக்கிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே வாழ்த்து:

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவும் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதில், “பிரதமர் மோடி ஒரு முன்னுதாரண தலைவரும், உலக தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டுமாவார்” என்று குறிப்பிட்டார். மேலும், 20 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்ட சாதனையை அவர் சிறப்பாக பாராட்டினார்.

2023ஆம் ஆண்டு மே மாதத்தில் பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற FIPIC-III மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் ஒருவர் முதல் முறையாக அந்நாட்டிற்கு சென்ற பயணமாக அது அமைந்தது. இதன் மூலம் பசிபிக் தீவு நாடுகள் மற்றும் குளோபல் சவுத் நாடுகளுடன் இந்தியா உறவை வலுப்படுத்தியதாக கருதப்படுகிறது.

திரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸசரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக விவகாரங்களில் முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். எளிய பின்னணியில் இருந்து வந்து, 140 கோடி மக்களை கொண்ட நாட்டை தொடர்ந்து மூன்று முறை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ள அவரது பயணம் உலகம் முழுவதும் பலருக்கு உத்வேகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நேருவை வென்ற பிரதமர் மோடியின் வெற்றிக்கு இதுதான் காரணம்.. – தேவே கௌடா சொன்ன முக்கிய பாய்ண்ட்ஸ்!

2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி திரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு பயணம் மேற்கொண்டார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட இருதரப்பு பயணமாக அது அமைந்தது. கரீபியன் நாட்டிற்கு இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வந்து 180 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு அந்த பயணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உலக தலைவர்களின் இந்த வாழ்த்து செய்திகள், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் சர்வதேச மதிப்பு மற்றும் செல்வாக்கு உயர்ந்துள்ளதற்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பிராந்திய சக்தியாக இருந்த இந்தியா, தற்போது உலக பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் துறைகளில் தவிர்க்க முடியாத முக்கிய நாடாக உருவெடுத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரலாற்றுச் சாதனையை பிரதமர் மோடி எட்டியுள்ள நிலையில், அவரது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் மீதமுள்ள ஆண்டுகளில் இந்தியா மேலும் எந்த திசையில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

Follow Us