AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

US Israel Iran War : ஈரான் – இஸ்ரேல் போர்.. இதுவரை நடந்தவை முழு விவரம்

US Israel attack Iran Updates : மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகத்தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Mar 2026 11:27 AM IST
Share
US Israel Iran War : ஈரான் – இஸ்ரேல் போர்.. இதுவரை நடந்தவை முழு விவரம்
மேற்கு ஆசியா போர்

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 8, 2026 அன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கரும்புகை எழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த சில தகவல்களின் படி, ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனேய் அலுவலகத்தின் அருகிலும் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஈரான் வான்வெளி வழியாக சென்ற பல சர்வதேச பயணிகள் விமானங்கள் அவசரமாக தங்கள் பாதையை மாற்றி பயணிக்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் பல விமானங்கள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க கடற்படை தளம் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Mar 2026 09:45 PM (IST)

    உலகில் மிகப்பெரிய தீவிரவாத ஆதரவு நாடு ஈரான் – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்

    ஈரான் உலகளவில் தீவிரவாதத்திற்கு நிதி மற்றும் ஆதரவு வழங்கும் முக்கிய நாடாக இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சாரர்  குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் தற்போது உலகின் நம்பர் 1 தீவிரவாத ஆதரவாளர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 04 Mar 2026 09:30 PM (IST)

    லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

    அமெரிக்கா– இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட் நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 04 Mar 2026 09:11 PM (IST)

     தவறுதலாக 3 அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத் போர் விமானம்

    மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தின் மத்தியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குவைத் விமானப் படைக்கு சொந்தமான  போர் விமானம் தவறுதலாக மூன்று அமெரிக்க  போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 04 Mar 2026 08:45 PM (IST)

    ஜெருசலேமில் வெடி சத்தம் – ஏவுகணை தாக்குதல் அச்சம்

    அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமாகி வரும் நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பல வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனம் AFP தெரிவித்ததாவது, ஜெருசலேமில் இந்த வெடிப்புகள் கேட்கப்பட்டதாக அங்கு இருந்த செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

  • 04 Mar 2026 08:30 PM (IST)

    அவர்கள் முடிந்துவிட்டார்கள்… – ஈரானை தாக்கிய அமெரிக்கா கடும் விமர்சனம்

    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானை கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், அந்த உண்மையை அவர்களே விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • 04 Mar 2026 08:14 PM (IST)

    ஈரானின் முக்கிய போர்க்கப்பல் மூழ்கடித்தோம் – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானின் முக்கியமான போர்க்கப்பலாக கருதப்பட்ட சோலெய்மானி கப்பலை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

  • 04 Mar 2026 08:00 PM (IST)

    இப்போதுதான் ஆரம்பம்… – ஹெக்செத் எச்சரிக்கை

    அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் சூழ்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். போராட்ட நடவடிக்கைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன என்றும், அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 04 Mar 2026 07:45 PM (IST)

    ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

    ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் பாராட்டியுள்ளார். இஸ்ரேல் மிகவும் திறமையான மற்றும் வலிமையான கூட்டாளி நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொடர்பாக பேசிய ஹெக்செத்,  இஸ்ரேல் தனது பணியை அபார திறமை மற்றும் உறுதியுடன் நிறைவேற்றி வருகிறது. இவ்வளவு திறமையான நாட்டுடன் தோளோடு தோள் நின்று செயல்படுவது மிகப்பெரிய பலமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

  • 04 Mar 2026 07:24 PM (IST)

    சர்வதேச கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

    சர்வதேச கடற்பரப்பில் ஈரானுக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்  தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

  • 04 Mar 2026 07:00 PM (IST)

    போரில் இதுவரை 1,045 பேர் உயிரிழப்பு – ஈரான் தகவல்

    அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஈரான் அரசுடன் தொடர்புடைய ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, இந்த போரில் இதுவரை குறைந்தது 1,045 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • 04 Mar 2026 06:49 PM (IST)

    கத்தாரில் அமெரிக்க தூதரகம் அவசர எச்சரிக்கை – அமெரிக்கர்கள் உடனே வெளியேறுமாறு அறிவுரை

    அமெரிக்கா -இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தீவிரமாகி வரும் நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அங்கு வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருவதால், அமெரிக்கர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 04 Mar 2026 06:15 PM (IST)

    ஈரான் ஏவுகணைகளை தடுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 04 Mar 2026 06:00 PM (IST)

    துருக்கியை நோக்கி வந்த ஈரானின் பாலிஸ்டிக் ஆயுதம் தடுப்பு

    அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் சூழ்நிலைக்கு நடுவே புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஆயுதம் துருக்கி வான்வெளியை நோக்கி வந்ததாகவும், அதை நேட்டோ வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நாசப்படுத்தியதாகவும் துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • 04 Mar 2026 05:45 PM (IST)

    ஜோர்டானில் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

    மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா பெரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், ஈரான் மேற்கொண்ட  பதில் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 04 Mar 2026 05:00 PM (IST)

    போரின் தீவிரம் அதிகரிப்பு

    ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் ஐந்தாவது நாளான புதன்கிழமையும் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமாக மாறியுள்ளது.

  • 04 Mar 2026 04:45 PM (IST)

    டிரம்ப் – நெதன்யாகு போஸ்டர்களை எரித்த மெஹபூபா முஃப்தி

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை கண்டிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் போஸ்டர்களை எரித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை மெஹபூபா முஃப்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

  • 04 Mar 2026 04:28 PM (IST)

    இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல் -101 பேர் மாயம் – பரபரப்பு தகவல்

    இலங்கை கடற்கரைக்கு அருகே சென்றுகொண்டிருந்த ஈரானிய கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளதாகவும், மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனமான ரூட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

  • 04 Mar 2026 04:00 PM (IST)

    230 ட்ரோன்களை ஏவினோம் – ஈரான் அறிவிப்பு

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலைத் தொடர்ந்து ஈரானிய இராணுவம் 230 ட்ரோன்களை ஏவியதாக அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்ததாக ஐஆர்ஜிசி கூறுகிறது

  • 04 Mar 2026 03:45 PM (IST)

    டிரம்ப் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சரின் முக்கிய கருத்துக்கள்

    அணுசக்தி பேச்சுவார்த்தைகள் போன்ற சக்தி மிக்க பேச்சுவார்த்தைகள் சொத்து பரிவர்த்தனைகளைப் போல நடத்தப்படும்போது, ​​அப்பட்டமான பொய்கள் யதார்த்தத்தை மறைக்கும் போது, அவற்றை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது அறிக்கையில் கூறினார். டிரம்ப் குறித்து அவர் முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். டிரம்ப் ராஜதந்திரத்தையும் அவரைத் தேர்ந்தெடுத்த அமெரிக்கர்களையும் காட்டிக் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

  • 04 Mar 2026 03:33 PM (IST)

    ஈரானின் புதிய உச்ச தலைவரையும் நாங்கள் கொல்வோம்: இஸ்ரேல்

    கமேனியின் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. அவரது மகன் மொஜ்தபா கமேனியை புதிய உச்ச தலைவராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அலி கமேனி வருகிற மார்ச் 6, 2026 அன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படுவார். இருப்பினும், உச்ச தலைவராக யார் வந்தாலும் கொல்லப்படுவார்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் பொருள் மொஜ்தபாவும் குறிவைக்கப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

  • 04 Mar 2026 12:35 PM (IST)

    ஈரானின் அடுத்த உட்சபட்ச தலைவர் இவர் தான்!

    ஈரானின் உட்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஈரானின் அடுத்த உட்சபட்ச தலைவராக அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • 04 Mar 2026 12:05 PM (IST)

    இந்தியர்களை மீட்க இந்தியாவில் இருந்து 58 விமானங்கள் இயக்கம்!

    மேற்கு ஆசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று (மார்ச் 04, 2026) 30 இண்டிகோ விமானங்கள், 23 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என் மொத்தம் 58 விமானங்கள் இன்று இயக்கப்படுகின்றன. கள நிலவரத்திற்கு ஏற்ப வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்திய விமானத்துறை கூறியுள்ளது.

  • 04 Mar 2026 11:30 AM (IST)

    எண்கள் விவரம்

    • 1800118797 (கட்டணமில்லா எண்)
    • +91 11 2301 2113
    • +91 11 2301 4104
    • +91 11 2301 7905
    • பஹ்ரைன்: +973 39418071
    • ஈரான்: +98 9128109115 / +98 912810910 / +98 912810910 / +98 932179359
    • ஈராக்: +964 771 651 1185 / +964 770444 4899
    • இஸ்ரேல்: +972 54 7520711 / +972 54 2428378
    • ஜோர்டான்: +962 770 422 276
    • குவைத்: +965 65501946
    • லெபனான்: +961 76860128
    • ஓமன்: +968 98282270 (வாட்ஸ்அப் எண்) / 80071234 (கட்டணமில்லா)
    • கத்தார்: +974 55647502
    • பாலஸ்தீனம்: +970 592916418
    • சவுதி அரேபியா (ரியாத்): +966 11 4884697 / 800 247 1234 (கட்டணமில்லா)
    • சவுதி அரேபியா (ஜித்தா): +966 126648660 / +966 12 2614093
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: +971 543090571 (வாட்ஸ்அப்) / 800 46342 (கட்டணமில்லா)
  • 04 Mar 2026 11:27 AM (IST)

    கட்டுப்பாட்டு அறை

    மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

  • 04 Mar 2026 11:15 AM (IST)

    அமெரிக்கா உத்தரவு

    நிலைமை மோசமடைந்து வருவதைக் கண்டு, அவசரகால ஊழியர்கள் அல்லாத அனைவரும் சவுதி அரேபியா மற்றும் ஓமானை விட்டு வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

  • 04 Mar 2026 11:00 AM (IST)

    அமெரிக்க தூதரகம் குறி

    அமெரிக்க தளங்களை ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிவைக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு சிஐஏ நிலையமும் ஈரானிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

  • 04 Mar 2026 10:20 AM (IST)

    மிகுந்த எச்சரிக்கை

    மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய கடற்படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. ஓமன் வளைகுடா மற்றும் ஏடனில் நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல்கள் தேவைப்பட்டால் உடனடியாக நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியும்.

  • 04 Mar 2026 10:15 AM (IST)

    பங்குச் சந்தை வீழ்ச்சி

    மேற்கு ஆசியா போர் காரணமாக பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைக் கண்டது, இதன் விளைவாக சந்தை திறந்தவுடன் முதலீட்டாளர்களுக்கு ₹9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

  • 04 Mar 2026 10:05 AM (IST)

    தயார் நிலையில் ஐஎன்எஸ் சூரத்

     மேற்கு ஆசியா போர் பதட்டம் காரணமாக நிவாரணம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய கடற்படை முழுமையாக தயாராக உள்ளது. ஐஎன்எஸ் சூரத் ஓமன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் குடிமக்களை தாயகம் அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

  • 04 Mar 2026 09:45 AM (IST)

    டிரம்ப் கருத்து

    போர் முடிந்த பிறகு, ஈரானிய ஆட்சிக்குள் இருந்து ஒருவர் ஆட்சியைக் கைப்பற்றுவதே சிறந்த வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

  • 04 Mar 2026 09:30 AM (IST)

    ஆயுத உற்பத்தி தொடர்பான கூட்டம்

    ஈரானுடனான போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிகாரிகள் ஆயுத உற்பத்தி தொடர்பான கூட்டத்தை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெறும், ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வார்கள்.

  • 04 Mar 2026 09:15 AM (IST)

    இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை

    ஈரான் கத்தார் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது, அவற்றில் ஒன்று அல்-உதெய்த் அமெரிக்க தளத்தைத் தாக்கியது. கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

  • 04 Mar 2026 08:52 AM (IST)

    ஆளில்லா விமானங்கள் தாக்குதல்

    சவுதி அரேபியாவில் ஈரானிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சவுதி அரேபிய இராணுவம் அனைத்து ஆளில்லா விமானங்களையும் இடைமறித்து தாக்கியதாகக் கூறுகிறது

  • 04 Mar 2026 08:51 AM (IST)

    குண்டுவீச்சு இன்றும் தொடர்கிறது

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சு இன்றும் தொடர்கிறது. தெஹ்ரானில் உள்ள IRGC தளங்கள் மீது பேரழிவு தரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

  • 03 Mar 2026 09:51 PM (IST)

    ஈரான் அதிபரின் முக்கிய அறிக்கை

    மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஈரான் அதிபர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். போர் நடைபெற்று கொண்டிருந்தாலும், ஈரான் அரசின் நிர்வாக இயந்திரம் சீராகவும் திறம்படவும் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும், மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

  • 03 Mar 2026 09:23 PM (IST)

    ஈரானை போல குறைந்த செலவில் டிரோன்களை உருவாக்கிய அமெரிக்கா

     

    லுகாஸ் எனப்படும் ஈரானின் சாஹேத் ட்ரோன்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டிரோன்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருமுறை தாக்கும் வகை ட்ரோனாகும், அதாவது இலக்கைத் தாக்கிய பின்னர் திரும்பி வராது. குறைந்த செலவில் அதிக அளவில் தயாரிக்கக்கூடிய வகையில் லுகாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 35,000 அமெரிக்க டாலர் மதிப்பிலேயே இந்த ட்ரோன் தயாரிக்கப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

  • 03 Mar 2026 09:00 PM (IST)

    48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பேசிய பிரதமர் மோடி

    ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கு ஆசியாவின் சமீபத்திய சூழ்நிலையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், கட்டார் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் பேசிய பிரதமர், அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்தார்.

  • 03 Mar 2026 08:45 PM (IST)

    டிரம்ப் அறிக்கை வெளியீடு: இப்போது தாமதமாகிவிட்டது

    அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். டெஹ்ரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், தற்போது ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர விரும்புகிறது எனத் தகவல் கிடைத்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டார். ஆனால், அது மிகவும் தாமதமாகிவிட்டதாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 03 Mar 2026 08:26 PM (IST)

    இஸ்ரேல் – ஈரான் மோதல் – புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்யும் மன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல்

    மத்திய கிழக்கில் தொடரும் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்ற சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஒன்றிணைந்து தாக்குதலை மேற்கொண்டதாக உள்ள செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த தாக்குதல்கள் ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்ய பயன்படும் கட்டிடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • 03 Mar 2026 08:00 PM (IST)

    ஓமனில் ஈரான் ட்ரோன்களால் பரபரப்பு

    ஓமன் நாட்டில் ஈரான் சார்பில் அனுப்பப்பட்டதாக கூறப்படும் ட்ரோன்கள் காரணமாக பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஓமனின் தோஃபார் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் இரண்டு ட்ரோன்களை வெற்றிகரமாக தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சலாலா துறைமுகம் அருகே மற்றொரு டிரோன் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • 03 Mar 2026 07:45 PM (IST)

    அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் – சவுதி கண்டனம்

    தங்களது நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சவுதி அரேபியா கடுமையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறுகின்றது என்றும், தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு மிஷன்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

  • 03 Mar 2026 07:30 PM (IST)

    ஈரானை மீண்டும் கடுமையாக விமர்சித்த டிரம்ப்

    ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஈரானின் ஏர் டிபென்ஸ் அமைப்புகளையும் கடற்படையையும் அமெரிக்கா முழுமையாக நாசம் செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், தற்போது ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், அது ஏற்கனவே தாமதமாகிவிட்டது என டிரம்ப் குறிப்பிட்டார்.

  • 03 Mar 2026 07:19 PM (IST)

    டெஹ்ரானில் பதற்றம்: இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிய இந்திய தூதரகம்

    ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நிலவும் அதிகரித்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்னிட்டு, இந்திய தூதரகம் பெரும்பாலான இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. இது தொடர்பாக மார்ச் 3, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், டெஹ்ரானில் தங்கி இருந்த இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் நகரத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

    அவசர உதவி எண்கள் வெளியீடு

    டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அவசர தொடர்பு எண்கள்:

    +989128109115
    +989128109109
    +989128109102
    +989932179359

  • 03 Mar 2026 07:00 PM (IST)

    இஸ்ரேல் – ஈரான் மோதல் – டெல்லியில் இடதுசாரி கட்சிகள் போராட்டம்

     

    மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் காமெனெய் கொல்லப்பட்டதை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் மார்ச் 3, 2026 அன்று டெல்லியின் ஜன்தர் மந்தர் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 03 Mar 2026 06:48 PM (IST)

    பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

    அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஈரான் உச்ச தலைவர் காமெனெய்யின் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு அளிக்கிறாரா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  • 03 Mar 2026 06:35 PM (IST)

    ஓமன் மன்னர் மற்றும் குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 3, 2026 அன்று ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் நாட்டின் இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல் -ஹமத் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அந்த நாடுகளில் நடந்த தாக்குல்தள் குறித்து மோடி கவலை தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஓமன் மற்றும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

  • 03 Mar 2026 06:00 PM (IST)

    ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கில் CBSE தேர்வுகள் ஒத்திவைப்பு

    ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலையை முன்னிட்டு, சிபிஎஸ்இ மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

  • 03 Mar 2026 05:45 PM (IST)

    அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 787 ஆக உயர்வு

    மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை 787ஆக உயர்ந்துள்ளதாக ஈரானின் ரெட் கிரெசன்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக இது நேர்ந்துள்ளது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

  • 03 Mar 2026 05:30 PM (IST)

    ஈரானின் அரசமைப்பு குறித்து முடிவு செய்யும் உரிமை அந்நாட்டு மக்களிடமே உள்ளது – ஓமர் அப்துல்லா

    ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா மார்ச் 3, 2026 செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை மாற்றுவது தொடர்பான முடிவை, அந்நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வெளிநாடுகளின் அழுத்தம் அல்லது தாக்குதல்களால் ஏற்படும் மாற்றங்கள் சரியான வழியாகாது என்றார்.

  • 03 Mar 2026 05:15 PM (IST)

    இடதுசாரி அமைப்புகள் போராட்டம்

    டெல்லியில் அமெரிக்கா – இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்கும், ஈரானின் உச்ச தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதற்கும் எதிராக இடதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் மார்ச் 3, 2026 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தர் முன்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி CPI, CPM மற்றும் மற்ற இடதுசாரி அமைப்புகள் ஈரானின் மீது நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையை சர்வதேச சட்ட விதிகளை மீறும் செயலாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • 03 Mar 2026 05:00 PM (IST)

    ஈரானின் நத்தாஞ்சஸ் அணு மையத்தில் சேதம்: IAEA தகவல்

    அமெரிக்கா – இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களின் பின்னணியில், ஈரானின் நத்தாஞ்சஸ் அணு செறிவூட்டல் நிலையத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சேதம் அணு மையத்தின் அடிநிலப் பகுதியில் உள்ள கட்டிடங்களில் ஏற்பட்டுள்ளது.

  • 03 Mar 2026 04:45 PM (IST)

    ஈரானுடனான போர் ஆண்டு கணக்காக நீடிக்காது: நெதன்யாகு உறுதி

     

    ஈரானுடன் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார். ஃபோக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்த நடவடிக்கை வேகமாகவும் தீர்மானமாகவும் முடிவுக்கு வரும். சில காலம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இது ஆண்டு கணக்காக நீடிக்கும் போராக இருக்காது. முடிவில்லாத போர் அல்ல என்று வலியுறுத்தினார்.

  • 03 Mar 2026 04:23 PM (IST)

    துறைமுகங்களில் சிக்கிய 4 லட்சம் டன் இந்திய பாஸ்மதி அரிசி

     

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – ஈரான் மோதல்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் இந்திய பாஸ்மதி அரிசி தற்போது துறைமுகங்களில் மற்றும் கடல் மார்க்கத்தில் சிக்கியுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • 03 Mar 2026 04:00 PM (IST)

    ஈரானில் புதிய இடைக்கால உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட அயத்துல்லா அலிரெசா அராபி

    ஈரான் தனது நீண்டகால உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனெய் மரணத்துக்குப் பிறகு இடைக்கால உச்ச தலைவராக அயத்துல்லா அலிரெசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார். அலிரெசா அராபி இந்திய நேரத்தைப் பொறுத்து 1959-இல் ஈரானில் பிறந்தார் மற்றும் நாட்டின் மத மற்றும் அரசியல் அமைப்புகளில் பல வருட அனுபவம் கொண்டவர். இவரது இடைக்காலத் தலைமை, புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் வரை தொடரும் என்று ஈரானின் அரசியல் அமைப்பு நடைமுறையில் உள்ளது.

  • 03 Mar 2026 03:25 PM (IST)

    ஈரான் போர் பதற்றம் எதிரொலி: ஐரோப்பிய எரிவாயு விலை 20% உயர்வு

    ஈரான் தொடர்பான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வளைகுடா பகுதிகளில் இருந்து எரிவாயு விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை திடீரென உயர்ந்துள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் எரிவாயு ஏற்றுமதி குறையக்கூடும் என்ற கவலை சந்தையில் பரவியதால், ஐரோப்பிய அளவுகோலாக கருதப்படும் இயற்கை எரிவாயு ஒப்பந்த விலை திங்கள்கிழமை 20 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது.

  • 03 Mar 2026 03:23 PM (IST)

    குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது தாக்குதல் – ஈரான் தகவல்

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு இந்தியப் பெருங்கடலில் இருந்த எதிரி கப்பல்களையும் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்களில் மொத்தம் 15 க்ரூஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.

  • 03 Mar 2026 03:00 PM (IST)

    இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் – வடகொரியாவின் நிலை என்ன?

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய ராணுவ தாக்குதல்கள், வட கொரியாவின் அணு ஆயுதக் கொள்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வட கொரியா தலைவர் கிம் ஜாங்க் உன் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கிம் மற்றும் ட்ரம்ப் இடையே உச்சி மாநாடு நடைபெற்றிருந்தாலும், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பின்னர் முடங்கிப் போனது. வட கொரியாவின் அணு ஆயுத களஞ்சியம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மீது கடுமையான சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லாததால் தான் அது தாக்கப்பட்டது என கிம் நினைத்திருக்கலாம்,” என்று தென் கொரியாவின் டேஜியோன் பல்கலைக்கழக பேராசிரியர் சோங் சியோங்-ஜோங் கருத்து தெரிவித்துள்ளார்.

  • 03 Mar 2026 02:48 PM (IST)

    இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் – துபாயில் இருந்து பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கிய விமானம்

    மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற சூழ்நிலையின் பின்னணியில் முக்கியமான முன்னேற்றமாக, துபாயிலிருந்து புறப்பட்ட முதல் ஏர் இந்தியா விமானம் மார்ச் 03, 2026 அன்று டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் துபாயிலிருந்து புறப்பட்டு, நியூ டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.  இந்த விமானத்தில் மொத்தம் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணம் செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இன்று தேசிய தலைநகருக்கு வந்த முதல் சர்வதேச இந்திய விமான சேவை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 03 Mar 2026 02:30 PM (IST)

    ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் – காஷ்மீரில் வெடித்த போராட்டம்

    அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காஷ்மீரில் ஏற்பட்ட போராட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் தலைவர் காமெனெய் உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவரை நினைவுகூரும் வகையில் காஷ்மீரின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் நகரத்தின் மையமான லால் சோக்கை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது பாதுகாப்பு படையினர் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்தனர். இதில் 5 போலீஸார் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 03 Mar 2026 02:17 PM (IST)

    ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பலவாரங்கள் நீடிக்கும் – இஸ்ரேல் ராணுவம்

    இஸ்ரேல் – ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பல வாரங்கள் நீடிக்கக்கூடும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோஷானி (Nadav Shoshani) செவ்வாய்க்கிழமை ஆன்லைன் விளக்கக் கூட்டத்தில் பேசினார். “பல வாரங்களுக்கு நீடிக்கும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால் நிலைமைகளின் மாற்றத்தினைப் பொறுத்து நடவடிக்கையின் கால அளவு மாறக்கூடும்,” என்று அவர் கூறினார்.

  • 03 Mar 2026 02:06 PM (IST)

    ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதிகளில் ஐ.டி.எஃப் தாக்குதல்கள்..

    ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தின, இதனால் வானத்தில் பெரும் வெடிப்புகள் மற்றும் புகை மூட்டங்கள் கிளம்பின. இந்த தாக்குதல்கள் ஈரானின் தெஹ்ரானிலும், லெபனானின் பெய்ரூட்டிலும் உள்ள இராணுவ மற்றும் மூலோபாய நிறுவல்களை குறிவைத்தன. இரு நகரங்களிலும் உள்ள “இராணுவ இலக்குகள்” மீது புதிய தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் இன்று காலை அறிவித்தது.

     

  • 03 Mar 2026 12:52 PM (IST)

    ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்

    மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது மிகக் கடுமையான பதிலடியைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் ஈரானியப் படைகளால் தாக்கப்படும்” என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

  • 03 Mar 2026 12:04 PM (IST)

    ஈரான் – இஸ்ரேல் போர்.. விளைவுகள் என்ன?

    ஈரான்-இஸ்ரேல் போர் இப்போது மற்ற நாடுகளையும் பாதிக்கும். இந்த நாடுகளுக்கு இடையிலான போர் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பு குறைந்துள்ளது. தற்போது, ​​நாட்டில் 17-18 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் இருப்பு மட்டுமே உள்ளது. 20-21 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது, மேலும் 10-12 நாட்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கச்சா எண்ணெய் நம் நாட்டை அடைந்தால், நம் நாட்டில் இருப்பு இன்னும் 2 வாரங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • 03 Mar 2026 11:06 AM (IST)

    பாதுகாப்புப் படையினருக்கும் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்.. ட்

    பாதுகாப்புப் படையினருக்கும் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஷியா தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கண்ணீர் புகை, நீர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். 

  • 03 Mar 2026 10:03 AM (IST)

    4 வாரங்கள் வரை நீடிக்கும் போர் – அதிபர் டிரம்ப்..

    மேற்கு ஆசியாவில் இதுவரை ஆறு அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர். நேற்று, ஈரான் குவைத், பஹ்ரைன் மற்றும் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களைத் தாக்கியது. ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மேற்கு ஆசியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப வல்லரசு தயாராக உள்ளது. அதேசமயம் போர் இன்னும் 4-5 வாரங்கள் நீடிக்கும் என்று டிரம்ப் தெளிவுபடுத்துகிறார்.

  • 03 Mar 2026 08:53 AM (IST)

    ஈரான் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல்..

    தெஹ்ரானில் உள்ள ஈரான் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல். நாடாளுமன்றக் கட்டிடத்திலிருந்து வெளியாகும் தீப்பிழம்புகள் . 

     

  • 03 Mar 2026 08:34 AM (IST)

    ஈரான் தாக்குதல் குறித்து குவைத் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை..

    ஈரான் தனது நாட்டை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குவதாக குவைத் தெரிவித்துள்ளது. ஈரான் இதுவரை 384 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும் ஈரான் 178 பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியது என்றும் குவைத் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

  • 03 Mar 2026 06:49 AM (IST)

    ஈரான் மீது மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை..

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது மற்றொரு பெரிய தாக்குதல் வரவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை அவர்கள் தாக்குதலை அதிகரிக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் பெரிய தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் அவர் கூறினார். ஈரானியர்கள் வீட்டிற்குள் இருக்கவும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

     

  • 02 Mar 2026 09:41 PM (IST)

    ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம்..

    அமெரிக்காவும் இஸ்ரேலும் கமெனியின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் மரணத்தை தனித்தனியாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. கமெனியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான் 40 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தது. 1989 முதல் கமெனி ஈரானின் மிக முக்கியமான அரசியல் மற்றும் மதத் தலைவராக இருந்து வருகிறார்.

  • 02 Mar 2026 08:49 PM (IST)

    எரிவாயு உற்பத்தியை நிறுத்த கத்தார் முடிவு..

    ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு கத்தார் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. எரிவாயு உற்பத்தியை நிறுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உலகின் 20 சதவீத எரிவாயுவை கத்தார் வழங்குகிறது.

  • 02 Mar 2026 08:13 PM (IST)

    ஈரான் மீதான தாக்குதல்.. அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை..

    போரின் போது அமெரிக்கா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அது போரை தொடங்கவில்லை என்றும், அது தானே முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் கூறியது. பலமுறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் ஈரான் அணு ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி வருவதாக அது கூறியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இறந்துவிடும் என்று கமேனி கூறியதை அது நினைவூட்டியது. ஆனால் கமேனி போரில் இறந்தார். போரில் இரு தரப்பினரும் இழப்புகளைச் சந்திப்பதாக அமெரிக்கா கூறியது

  • 02 Mar 2026 07:17 PM (IST)

    அமெரிக்கா இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.. அலி கமேனெயின் மனைவி உயிரிழப்பு..

    ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனெயின் மனைவி மன்சூரெஹ் கொஜஸ்தே பாகெர்சதே (Mansoureh Khojasteh Bagherzadeh) சமீபத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக ஈரான் மாநில ஊடகம் தெரிவித்துள்ளது.

  • 02 Mar 2026 06:14 PM (IST)

    குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்..

    குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இன்று காலை ஈரான் தூதரகத்தை குறிவைத்து ஏவுகணைகளை வீசியது. 

  • 02 Mar 2026 05:25 PM (IST)

    அமேசான் தரவு மையத்தின் மீது தாக்குதல்..

    இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமேசான் வலை சேவைகள் (AWS) தரவு மையங்கள் கடுமையான இணைப்பு சிக்கல்களை சந்தித்து வருவதாக அறிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமேசான் வலை சேவைகள் மண்டலத்தில் மின் தடை ஏற்பட்டதாக நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் தரவு மையங்களைத் தாக்கி, விரிவான சேதத்தையும் தீயையும் ஏற்படுத்தியதாக அமேசான் தெரிவித்துள்ளது.

  • 02 Mar 2026 04:17 PM (IST)

    பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்..

    இஸ்லாமிக் ரெவலூஷனரி கார்ட்ஸ் (IRGC) இன்று தெரிவித்ததன்படி, சனிக்கிழமை அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபல ஈரான் சபைத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கமைனியைப் பார்க்கும் தலைமை அமைப்பு ஆகியதால், அவர்கள் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்னயாஹு அவுட்மொழி அலுவலகத்தைத் தெல் அவிவில் மட்டுமல்லாமல், ஹைபா மற்றும் கிழக்கு ஜெருசலேம்-இலுள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ மையங்களையும் இலக்காக கொண்டு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • 02 Mar 2026 03:17 PM (IST)

    ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து பாதிப்பு.. தாறுமாறாக உயரும் கச்சா எண்ணெய் விலை..

    தாக்குதல் குறித்து அராம்கோ நிறுவனத்தின் ஊடகப் பிரிவு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர், சவுதி அராம்கோவின் ரசு தனூரா நிலையத்தை குறிவைத்து வந்த இரண்டு ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாக அல் அரேபியா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் உலக எண்ணெய் சந்தை மிகுந்த அழுத்தத்தில் உள்ள தருணத்தில் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. விரிவடைந்து வரும் ஈரான் மோதலின் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் தினசரி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% கையாளப்படும் இந்த குறுகிய கடற்பாதை தற்போது கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

  • 02 Mar 2026 02:38 PM (IST)

    அதிகரிக்கும் போர் பதற்றம்.. ரசு தநூரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்..

    இரான் ட்ரோன்கள் தாக்கியதைத் தொடர்ந்து, சவுதி அராம்கோ நிறுவனம் தனது ரசு தநூரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றான ரசு தநூரா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பிராந்தியத்தின் ஆற்றல் உட்கட்டமைப்பில் பரவலான பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

  • 02 Mar 2026 01:55 PM (IST)

    முதல் 30 மணி நேரத்தில்

    சண்டையின் முதல் 30 மணி நேரத்தில் ஈரானில் உள்ள இலக்குகள் மீது வீசப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போது பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பாதியாக இருந்தது என்று IAF தெரிவித்துள்ளது.

  • 02 Mar 2026 01:42 PM (IST)

    முதல் 30 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட குண்டுகள்

    சனிக்கிழமை காலை ஈரானுக்கு எதிரான சண்டை தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் நூற்றுக்கணக்கான ஈரானிய அரசாங்க இலக்குகள் மற்றும் இராணுவ தளங்கள் மீது 2,000 க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவிக்கின்றன.

  • 02 Mar 2026 01:27 PM (IST)

    ஏராளமான மக்கள் தவிப்பு

    உத்தரபிரதேசத்தில் உள்ள பஹ்ரைச், கோண்டா, சுல்தான்பூர், பல்ராம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். திடீரென வான்வெளி மூடப்பட்டதால் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.

  • 02 Mar 2026 01:16 PM (IST)

    மேற்கு ஆசியாவின் நிலைமை கவலை அளிக்கிறது – பிரதமர் மோடி

    மேற்கு ஆசியாவின் நிலைமை ஆழ்ந்த கவலைக்குரியது என்றும், இந்தியா அமைதியின் பக்கம் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

  • 02 Mar 2026 01:10 PM (IST)

    துபாயில் தவிக்கும் இந்தியர்கள்

    ஈரானில் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர்

  • 02 Mar 2026 01:01 PM (IST)

    ஈரானின் கப்பல்கள் மூழ்கின

    ஈரானின் கொனாராக் கடற்படைத் தளத்தை அமெரிக்கா-இஸ்ரேல் தாக்கியது, 3 கப்பல்கள் மூழ்கின, பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.

  • 02 Mar 2026 12:49 PM (IST)

    இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

    மேற்கு ஆசியாவில் போர் நடந்து வருவதால் இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

  • 02 Mar 2026 12:38 PM (IST)

    கத்தார் ஏர்வெஸ் தற்காலிகமாக நிறுத்தம்

    கத்தாரில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் கத்தார் ஏர்வெஸ் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  • 02 Mar 2026 12:28 PM (IST)

    ஈராக் விமான நிலையத்தை குறி வைக்கும் ஈரான்

    ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தை குறிவைக்க முயன்ற ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களையும் ஈராக் வான் பாதுகாப்பு எதிர்கொள்கிறது என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது

  • 02 Mar 2026 12:03 PM (IST)

    ஹ்ரைனிலும் சிவப்பு எச்சரிக்கை

    பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம், விமானத் தாக்குதல் எச்சரிக்கையை செயல்படுத்தியுள்ளதாகவும், அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. மனாமாவை அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கும் ஷேக் கலீஃபா பின் சல்மான் பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மக்கள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

  • 02 Mar 2026 11:59 AM (IST)

    ஈரானை நம்பி சீனா

    சீனா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில் ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து தொடர்ந்து கண்கானித்து வருகிறது

  • 02 Mar 2026 11:58 AM (IST)

    இன்றும் விமானம் ரத்து

    சென்னை விமான நிலையத்தில் துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 28 விமானங்கள் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், 2- ஆவது நாளாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

  • 02 Mar 2026 11:57 AM (IST)

    சீனா கண்டனம்

    ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களையும், உச்ச தலைவர் கமேனியின் படுகொலையையும் ரஷ்யாவும் சீனாவும் கடுமையாகக் கண்டித்துள்ளன

  • 02 Mar 2026 11:45 AM (IST)

    விமான சேவை இன்று 3- ஆவது நாளாக ரத்து

    இஸ்ரே- ஈரான் இடையே போர் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால், சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை இன்று 3- ஆவது நாளாக ரத்து

  • 02 Mar 2026 11:30 AM (IST)

    கச்சா எண்ணெய் இருப்பு

    இந்தியாவில் குறிப்பிடத்தக்க கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. மேலும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் வாய்ப்பும் அந்நாட்டிற்கு உள்ளது. எனவே, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை

  • 02 Mar 2026 11:24 AM (IST)

    குவைத் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்

    குவைத் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க தூதரகத்தை ஈரான் வான்வழி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

  • 02 Mar 2026 11:18 AM (IST)

    சாத்தியக்கூறுகள் இல்லை

    கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 ஐ தாண்டாத வரை, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

  • 02 Mar 2026 11:17 AM (IST)

    குவைத்தில் விழுந்த அமெரிக்க போர் விமானம்

    அமெரிக்காவின் போர் விமானம் குவைத்தில் நொறுங்கி விழுந்த வீடியோ வைரல். ஈரான் தாக்குதலில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதா என விசாரணை

  • 02 Mar 2026 11:09 AM (IST)

    துபாய் மீது ஈரானின் தாக்குதல்கள்

    • துபாய் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
    • ஈரான் குவைத்தில் ட்ரோன்கள் மூலம் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
    • வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
    • ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • ஈரான் தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம்
    • ஈரான் பதட்டங்களை ஆபத்தான நிலைக்கு அதிகரித்து வருவதாக கவலைகள்.
  • 02 Mar 2026 11:05 AM (IST)

    பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்குமா?

    கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய உயர்வு ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்குமா? என்பதே அது.

  • 02 Mar 2026 10:50 AM (IST)

    கச்சா எண்ணெய் விலை

    திங்களன்று, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலைகள் 82.37 ஐ எட்டின, இது ஜனவரி 2025 க்குப் பிறகு அதிகபட்சமாகும். இதன் பொருள் கச்சா எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 15 மாத உச்சத்தை எட்டியுள்ளன.

  • 02 Mar 2026 10:48 AM (IST)

    ஈரான் போர் பதட்டம் – இந்தியாவில் போராட்டம் நடக்க வாய்ப்பு

    மேற்கு ஆசியாவில் தொடரும் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் போராட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லப்பட்ட காமேனிக்கு ஆதரவாக இந்த போராட்டம் இருக்கலாம் என எச்சரிக்கை

  • 02 Mar 2026 10:47 AM (IST)

    தொடரும் ஈரானின் தாக்குதல்

    காமேனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் தொடர்ந்து பதில் தாக்குல்களை தொடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்குகிறது

Published On - Feb 28,2026 3:04 PM

Follow Us