அமெரிக்க நிலநடுக்கம்.. தரை இறங்க முடியாம நடுவானில் தவித்த விமானம்.. அடுத்து நடந்தது என்ன?
Loss Angels Plane Landing Crisis | அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்க தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விமானம் தரை இறங்க முடியாமல் தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன், நவம்பர் 29 : அமெரிக்காவில் (America) இன்று (நவம்பர் 29, 2026) நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்ட நிலையில், விமானம் ஒன்று தரை இறங்க முடியாமல் தவித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரை இறங்க தயாராகி கொண்டு இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டதால் விமானம் இந்த சிக்கலை சந்தித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விமானம் தரை இறங்க முடியாமல் தவித்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் தரை இறங்க முடியாமல் தவித்த விமானம்
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels) விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்க தயாராகிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது திடீரென நடுவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தரை இறங்க முடியாமல் விமானம் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா (South California) கடலோர பகுதியில் 5.2 ரிக்டர் அளவு சற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : நேபாள காற்றாட்டு வெள்ளம்.. காணாமல் போன 5 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அறிவிக்க முடிவு!
நடுவானில் தடுமாறி ஆட்டம் கண்ட விமானம்
நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் 1972 என்ற விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக தாழ்வாக பறந்துக்கொண்டு இருந்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக விமானத்தால் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரை இறங்க முடியாமல் போயுள்ளது. அதுமட்டுமன்றி, விமானம் தடுமாற்றத்தை கண்டதன் காரணமாக விமானத்திற்குள் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறி துடித்துள்ளனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் சூறாவளி கோரத்தாண்டவம்.. 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. 400 விமானங்கள் ரத்து
துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு
இந்த சூழலில் தான் விமானி யோசனை செய்து துரிதமாக முடிவு எடுத்துள்ளார். அதாவது, அவர் விமானத்தை தரை இறக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, மீண்டும் விமானத்தை வானத்தை நோக்கி இயக்கியுள்ளார். இதன் காரணமாக அங்கு நடைபெற இருந்த பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. விமானி பாதுகாப்பாக விமானத்தை இயக்கியதன் மூலம் தாங்கள் அனைவரும் உயிர் பிழைத்ததை உணர்ந்த அந்த விமானத்தில் இருந்த பயணிகள் விமானிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின்போது விபத்து ஏற்படாமல் இருக்க விமானி செய்த இந்த செயல், பரவலாக பாராட்டு பெற்று வருகிறது.