Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியர்களுக்கு சிக்கல்? குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்.. தவிக்கும் மாணவர்கள்!

UK Immigration Rule : பிரிட்டனர் லட்சக்கணக்கான இந்தியர்கள் இருக்கும் நிலையில், பிரிட்டனில் குடியேற்ற விதிகளை அந்நாட்டு அரசு மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் வசித்து இருந்ததால் தான், குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு முன்பு 5 ஆண்டுகள் காலம் இருந்த நிலையில், தற்போது அது மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இந்தியர்களுக்கு சிக்கல்? குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்.. தவிக்கும் மாணவர்கள்!
பிரிட்டன் குடியேற்ற விதிகள்Image Source: X/Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 May 2025 09:05 AM

பிரிட்டன், மே 14 :  குடியேற்ற விதிகளை பிரிட்டன் கடுமையாக்க உள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பிரட்டனில் தங்கி இருக்க வேண்டும் என விதியில் பிரிட்டன் அரசு மாற்றத்தை கொண்டுள்ளது. இதனால், குடியுரிமைக்காக விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.  இந்தியாவில் இருந்து வேலைக்காகவும், படிப்பிற்காக பலரும் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளில் தங்கி படித்தும், வேலை பார்த்து இந்தியர்கள் வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன்,  கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு  ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியார்கள் செல்கின்றனர். சிலர் அங்கையே நிரந்தரமாக தங்கி உள்ளனர். இதனால், அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரிட்டன் நாட்டிற்கு ஆண்டுதோறும் இந்தியர்கள் செல்கின்றனர்.

குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய பிரிட்டன்

பிரிட்டரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். மாணவர்கள், வேலை நிமித்தமாக இருப்பவர்கள் என பலரும் அங்கு உள்ளனர். குறிப்பாக, இந்திய மாணவர்களின் எண்ணக்கை அதிகமாக உள்ளது. இப்படியான சூழலில் தான், இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக புதிய விதியை பிரிட்டன் கொண்டு வந்துள்ளது.

அதாவது, குடியேற்ற விதிகளை பிரிட்டன் கடுமையாக்கி உள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பிரட்டனில் தங்கி இருக்க வேண்டும் என விதியில் பிரிட்டன் அரசு மாற்றத்தை கொண்டுள்ளது. அதன்படி, இனி 10 ஆண்டுகள் பிரிட்டனில் இருப்பவர்களுக்கு மட்டுமே,  குடியரிமை வழங்கப்படும் என்ற விதியை கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது.

இது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. ஆனால், இதுகுறித்து நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, பிரிட்டன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், இந்திய மாணவர்கள், அங்கு வேலை பார்ப்பவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதோடு, குடியுரிமைக்காக விண்ணப்பித்தும் இருக்கும் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிட்சம்.

இந்தியர்களுக்கு சிக்கல்

அதன்படி, ​​இங்கிலாந்தில் 10 ஆண்டுகளாக இருப்பவர்கள் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். பிரிட்டனில் குடியேற்றத்தில் 10 சதவீதம் சரிவு இருந்தாலும், குடியேற்ற விதிகளை கடுமையாக்கி உள்ளது. குடியேற்றத்தை கட்டுப்படுத்தவே பிரிட்டன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பிரிட்டன் பிரதமராக இருப்பவர் கெய்ட் ஸ்டார்மர்.

அண்மையில் நடந்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், பிரதமராக கெய்ட் ஸ்டார்மர் தேர்வு செய்யப்பட்டார். இவர் பிரதமராக பதவியேற்றதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அந்த வகையில், தற்போது குடியேற்ற விதிகளை கடுமையாக்கி இருக்கிறார். பிரிட்டனில் சட்டவிரோதமாக ஏராளமானோர் தங்கி இருப்பதால், குடியேற்ற விதிகளை மாற்றி அமைக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.