தென் கொரியாவில் நடத்தப்பட்ட தூக்க போட்டி.. 80 வயது முதியர் வெற்றி!

Sleep Competition Conducted In South Korea | உலக மக்கள் இடையே தூக்கமின்மை மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டும் அத்தகை போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், தென் கொரியாவின் சியோல் பகுதியில் நடைபெற்ற போட்டியில் 80 வயது முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

தென் கொரியாவில் நடத்தப்பட்ட தூக்க போட்டி.. 80 வயது முதியர் வெற்றி!

தென் கொரியா தூக்க போட்டி

Updated On: 

05 May 2026 00:12 AM

 IST

சியோல், மே 04 : தென் கொரியாவில் (South Korea) தூக்கமின்மை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வில் முதியவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் தூக்கமின்மை பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், கொரியாவில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் கொரியாவில் நடத்தப்பட்ட இந்த விநோத போட்டி குறித்து விரிவாக பார்க்கலாம்.

தென் கொரியாவில் நடத்தப்பட்ட தூக்க போட்டி

மனிதர்கள் ஆரோக்கியத்துடன் நலமுடன் இருக்க வேண்டும் என்றால் சரியான தூக்கம் அவசியமாக உள்ளது. தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில், தூக்கமின்மை தான் மிக முக்கிய சிக்கலாக உள்ளது. ஒரு மனிதர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தென் கொரியாவில் தூக்கத்தை வலியுறுத்தும் விதமாக தான் இந்த போட்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : டிஜிட்டல் கைது மோசடியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்.. சுடுகாடு வரை தொடர்ந்த தொந்தரவு!

தூக்க போட்டியில் வெற்றி பெற்ற 80 வயது முதியவர்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள ஹான் நதிக்கரையில் உள்ளா யோயுடோ ஹாங்காங் பூங்காவில் தூங்குவதற்கான போட்டி மே 02, 2026 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நன்றாக தூங்கி வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் சியோல் பகுதியில் நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜபல்பூர் விபத்து.. தாய் – மகன் பலி தொடர்பாக வைரலாகும் புகைப்படம் உண்மை அல்ல.. ஆட்சியர் விளக்கம்!

இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் மொத்தம் 170 பேர் கலந்துக்கொண்டனர். இந்த போட்டியில் கலந்துக்கொள்ள சில முக்கிய விதிகள் இருந்தன. அதாவது போட்டியில் வெற்றி பெற வெறுமனே கண்களை மூடுவது மட்டும் போதாது. போட்டியாளர்கள் அனைவருக்கும் இதய துடிப்பை கண்காணிக்கும் கருவிகள் வழங்கப்படும். இந்த நிலையில், குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் ஆழ்ந்து தூங்கும் நபர்களுக்கு அதற்கான மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த கடுமையான விதிகளை பின்பற்றி போட்டியிட்ட 80 வயது முதியவர் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 37 வயதான ஒரு நபர் இண்டாம் பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..