ஈரானுக்கு அணு ஆயுதம் அனுமதி இல்லை.. பேச்சுவார்த்தை தொடரும் நிலையில் டிரம்ப் கடும் எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் ஓமான், தனது வெளியுறவு அமைச்சரை வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளது. அவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் சந்தித்து அணு ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமான், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை இடைவெளியை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பிப்ரவரி 28, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு திட்டம் தொடர்பாக தாம் திருப்தியில்லையென வெளிப்படையாக தெரிவித்தார். டெக்சாஸுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரானுடன் ஒரு நல்ல மற்றும் வலுவான ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறேன். ஆனால் ஈரான் எந்த சூழலிலும் அணு ஆயுதம் பெற அனுமதிக்க முடியாது” என்று வலியுறுத்தினார். இந்த வாரம் முழுவதும் ஈரானின் அணு திட்டம் குறித்து அமெரிக்கா–ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை:
அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. கூடுதல் போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதோடு பதற்ற சூழலும் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: துராண்ட் கோடு அருகே கடும் மோதல்.. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி
“நான் ராணுவ நடவடிக்கையை விரும்பவில்லை. எனது முன்னுரிமை தூதரக வழி தீர்வு தான். ஆனால் சில நேரங்களில் சூழ்நிலை அதற்கான அவசியத்தை ஏற்படுத்தலாம்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார். இந்த கருத்து, தேவையானால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளுக்கு தயார் என்பதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
அணு ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம்:
இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வரும் ஓமான், தனது வெளியுறவு அமைச்சரை வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளது. அவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் சந்தித்து அணு ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமான், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை இடைவெளியை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும் படிக்க: பரிசுப் பணத்தை செலவு செய்த தந்தை மீது 10 வயது மகன் வழக்கு.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.. சுவாரஸ்ய சம்பவம்!
அமெரிக்கா, ஈரான் அணு ஆயுதம் உருவாக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஈரான், தனது அணு திட்டம் அமைதிக்கான மற்றும் மின்சாரம் உற்பத்திக்கான தேவைகளுக்காக மட்டுமே என தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாவிட்டால், புதிய பொருளாதார தடைகள் அல்லது ராணுவ மோதல் அபாயம் உருவாகலாம் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. எனவே, வரவிருக்கும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை, அமெரிக்கா–ஈரான் உறவில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.