Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“நாங்கள் முடிக்க தயார்” அதிரடி காட்டிய இந்தியா… பின்வாங்கிய பாகிஸ்தான்.. என்ன மேட்டர்?

Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூரை தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் பின்வாங்கியதாக தெரிகிறது. அதாவது, பதற்றமான சூழலை தணிக்க இந்தியா முன்வந்தால் நாங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“நாங்கள் முடிக்க தயார்” அதிரடி காட்டிய  இந்தியா… பின்வாங்கிய பாகிஸ்தான்.. என்ன மேட்டர்?
பிரதமர் மோடி - பாகிஸ்தான் அமைச்சர்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 May 2025 16:01 PM

பாகிஸ்தான், மே 07 : தற்போதைய பதற்றமான சூழலை தணிக்க இந்தியா முன்வந்தால் நாங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். மேலும், இந்தியா இந்த விஷயத்தில் பின்வாங்கினால், நாங்கள் நாங்கள் நிச்சயமாக இந்த விஷயங்களை முடித்துக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் இந்தியா 2025 மே 7ஆம் தேதியான இன்று தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் கூறியிருக்கிறார்.  பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பின்வாங்கிய பாகிஸ்தான்

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா 2025 மே 7ஆம் தேதியான இன்று தாக்குதலை  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது.  இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன்  சிந்தூர் என பெயரிப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் கிட்டதட்ட 25 நிமிடங்கள் நடந்ததாக ராணுவத்தினர் கூறினர்.

அதாவது, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்கல் நடத்தப்பட்டுள்ளது.  1971ஆம் ஆண்டுக்கு பிறகு  இந்தியா ராணுவம், கடற்படை, விமானப்படை என மூப்படைகளும் இன்று தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.  இந்த தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டன.

குறிப்பாக, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில்  ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோரின் முகாம்களும் தகர்க்கப்பட்டன. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும்,  இந்தியா மீது பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம்  என தெரிகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “இது இந்தியாவால் தொடங்கப்பட்டது. இந்தியா பின்வாங்கத் தயாராக இருந்தால், அவர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்.

பின்வாங்கிய பாகிஸ்தான்

நாங்கள் இப்போதுதான் பதிலளித்துள்ளோம். இந்தியாவுக்கு விரோதமான எதையும் நாங்கள் ஒருபோதும் தொடங்க மாட்டோம் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்கினால், நாங்கள் நிச்சயமாக இந்த விஷயங்களை முடித்துக்கொள்வோம். ஆனால் நாங்கள் தாக்குதல் உள்ளாகினால் நாங்கள் பதிலடி கண்டிப்பாக கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பிரதமர் கூறியதை அடுத்து, அந்நாட்டு அமைச்சர் இப்படியாக கூறியிருக்கிறார். எனவே, பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி பேசுகையில், இந்திய ராணுவம் எந்தவித தவறும் இல்லாமல், தயார் நிலையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. என்றார்.

இது எங்களுக்கு பெருமையான தருணம் என்றும் பிரதமர் ராணுவத்தைப் பாராட்டினார் என்றும் கூறி இருக்கிறார். இதன் பின்னர், மத்திய அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் பிரதமர் மோடியின் தலைமையின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். மேலும் முழு நாடும் அவருடன் இருப்பதாகக் கூறினர்.

பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!...
CSKvKKR : 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி!
CSKvKKR : 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி!...
புறக்கணிக்கப்பட்ட பும்ரா! டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் களம்..!
புறக்கணிக்கப்பட்ட பும்ரா! டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் களம்..!...
சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லையே- சூரி!
சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லையே- சூரி!...
'ஏஸ்' படத்தில் லேடி கெட்டப்பில் யோகிபாபு.. வைரலாகும் போட்டோஸ்!
'ஏஸ்' படத்தில் லேடி கெட்டப்பில் யோகிபாபு.. வைரலாகும் போட்டோஸ்!...
ரெட்ரோ பட லாபத்தின் பங்கை அகரம் பவுண்டேசனுக்கு பகிர்ந்த படக்குழு!
ரெட்ரோ பட லாபத்தின் பங்கை அகரம் பவுண்டேசனுக்கு பகிர்ந்த படக்குழு!...
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 15 பேர் பலி!
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 15 பேர் பலி!...
கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு! அழுத்ததால் ரோஹித் ஓய்வா?
கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு! அழுத்ததால் ரோஹித் ஓய்வா?...
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!
அதர்வாவின் 'டிஎன்ஏ' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு .. ரசிகர்கள் ஹேப்பி!...
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!
காந்தாரா படப்பிடிப்பில் நடந்த சோகம்.. விபத்தில் நடிகர் மரணம்!...
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு..
அதிர்ச்சியிலும் அதிர்ச்சி! டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வு.....