Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

New Baba Vanga : புதிய பாபா வங்காவின் பகீர் கணிப்புகள்.. பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்!

New Baba Vanga's 2025 Tsunami Warning | பாபா வங்கா உலகில் நடக்க உள்ள பேரழிவுகளை முன்கூட்டியே கணித்து வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் ஜப்பான் பெண்ணின் 2025 சுனாமி கணிப்புகள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

New Baba Vanga : புதிய பாபா வங்காவின் பகீர் கணிப்புகள்.. பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 22 May 2025 17:52 PM

சுனாமி (Tsunami) குறித்த புதிய பாபா வங்காவின் (New Baba Vanga) கணிப்பால் பொதுமக்கள் தங்களது பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். புதிய பாபா வங்கா என அழைக்கப்படும்  ரியோ டட்சுக்கி (Ryo Tatsuki) என்ற பெண் 2025-ல் ஜப்பான் (Japan) மற்றும் பிலிப்பைன்ஸ் (Philippines) பகுதியில் பெரிய அளவிலான சுனாமி பாதிப்பு ஏற்படும் என கணித்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் அந்த பெண் யார், சுனாமி குறித்து வெளியாகியுள்ள அவரின் கணிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த புதிய பாபா வங்கா?

பல்கேரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. இவர் தனது 12 வது வயதிலேயே பார்வை இழந்த நிலையில் உலகில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாபா வாங்க 1996 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவரது பல்வேறு கணிப்புகள் தற்போது வரை உண்மையாகி வருவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக உலகின் தீர்க்கதரிசி என பாபா வாங்க கருதப்படுகிறார்.

அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த ரியோ டாட்சுக்கி என்ற பெண் புதிய பாபா வாங்க என அழைக்கப்படுகிறார். இவர் 2011 மட்டும் 1995 என இரண்டு பெரிய பூகம்பங்களை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இந்த இரண்டு நிகழ்வுகள் குறித்தும் 1999 ஆம் ஆண்டு தான் வெளியிட்ட தி ஃபியூச்சர் ஐ சா (The Future I Saw) என்ற புத்தகத்தில் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2025-ல் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ள மிகப்பெரிய சுனாமி குறித்த இவரின் கருத்து தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

புதிய பாபா வங்காவின் கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்

2025 ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளை மிகப்பெரிய சுனாமி தாக்க உள்ளதாக புதிய பாபா வங்கா கணித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், 2011 ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட இந்த சுனாமி மூன்று மடங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ரியோ டட்சுக்கியின் இந்த கணிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எலும்பு ஆரோக்கியத்தை சட்டென அதிகரிக்கும் 5 விதைகள் இவைதான்!
எலும்பு ஆரோக்கியத்தை சட்டென அதிகரிக்கும் 5 விதைகள் இவைதான்!...
வீரர்கள் மீது தனித்தனி கவனம்.. ஆஷிஷ் நெஹ்ராவை புகழ்ந்த கில்..!
வீரர்கள் மீது தனித்தனி கவனம்.. ஆஷிஷ் நெஹ்ராவை புகழ்ந்த கில்..!...
இருசக்கர வாகனத்தில் சென்றபோது கணவனை செருப்பால் அடித்த பெண்!
இருசக்கர வாகனத்தில் சென்றபோது கணவனை செருப்பால் அடித்த பெண்!...
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் மதுரையில் போட்டியா?
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் மதுரையில் போட்டியா?...
சுமோ டூ வல்லமை... இந்த வாரம் ஓடிடியில் எந்தப் படம் பாப்பீங்க?
சுமோ டூ வல்லமை... இந்த வாரம் ஓடிடியில் எந்தப் படம் பாப்பீங்க?...
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!...
மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை - வைரல்!
மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை - வைரல்!...
பாரம்பரிய உணவு! மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?
பாரம்பரிய உணவு! மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?...
மண்பானை தண்ணீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?
மண்பானை தண்ணீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?...
புஷ்பா 2வில் வில்லன் மியூசிக் இப்படித்தான் உருவானது- சாம்சிஎஸ்
புஷ்பா 2வில் வில்லன் மியூசிக் இப்படித்தான் உருவானது- சாம்சிஎஸ்...
வீட்டு கடனை சுலபமாக அடைக்க வேண்டுமா? - இத பண்ணுங்க!
வீட்டு கடனை சுலபமாக அடைக்க வேண்டுமா? - இத பண்ணுங்க!...