Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர்… 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு – என்ன நடந்தது?

Indian student tragedy : ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் சௌத்ரி என்ற மாணவர் ரஷ்யாவில் உள்ள பாஷ்கீர் ஸ்டேட் மெடிக்கல் யூனிவர்சிட்டியில் மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் காணாமல் போனதாக கூறப்படும் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர்… 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு – என்ன நடந்தது?
மரணமடைந்த அஜித் சிங் சௌத்ரி
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Nov 2025 16:46 PM IST

ரஷ்யாவின் (Russia) உஃபா நகரில் 19 நாட்களாக காணாமல் போன இந்திய மாணவர் அஜித் சிங் சௌத்ரி, கடந்த நவம்பர் 6, 2025 அன்று வியாழக்கிழமை ஒரு அணையின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அஜித் சிங் சௌத்ரி, ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள, லக்ஷ்மங்கர் பகுதிக்கு அருகே காபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள பாஷ்கீர் ஸ்டேட் மெடிக்கல் யூனிவர்சிட்டியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அங்கே தங்கி படித்து வந்த அவர் திடீரென காணாமல் போன நிலையில், தற்போது அணை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர் காணாமல் போனது எப்படி?

மாணவர் அஜித் சிங் கடந்த அக்டோபர் 19, 2025 அன்று காலை சுமார் 11 மணியளவில், தன் விடுதியிலிருந்து பால் வாங்கச் சென்று வருகிறேன என்று கூறி வெளி சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் விடுதிக்கு திரும்பவில்லை. அவரைத் தேடும் பணியில்  ஒரு பக்கம் காவல்துறையினர் இறங்கிய நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் தேடும் முயற்சியில் இறங்கினர்.  இதன் ஒரு பகுதியாக பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்கள் பகிர்ந்தனர். இருப்பினும், 19 நாட்களாக தேடியும் அவரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையும் படிக்க : நேபாள பனிச்சரிவில் பலியான 9 மலையேற்ற வீரர்கள்.. சடலங்கள் மீட்பு!

இந்த நிலையில் அஜித் சிங் சௌதரியின் உடல் ஒயிட் ரிவர் அருகிலுள்ள அணையில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டது.  அவரின் உடைகள், காலணிகள் மற்றும் மொபைல் போன் ஆகியவை 19 நாட்களுக்கு முன்பே நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், இதனால் சந்தேகம் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. ஆனால் அஜித்தின் குடும்பத்தினருக்கு அவரது மரண செய்தி நவம்பர் 6, 2025 அன்று பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  காபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த அஜித், தனது குடும்பத்தின் கடின உழைப்பால் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவம் படிக்க ரஷ்யா அனுப்பப்பட்டார். ஆனால் இன்று அவரது மரணம் பெரும் வேதனையை அளிக்கிறது என அவரது கிராமத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க : அமெரிக்காவில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை

இந்த விவகாரம் குறித்து ஆல் இந்தியா மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் அதன் வெளிநாட்டு மாணவர் பிரிவு, ஜெய்சங்கரிடம் அதிகாரப்பூர்வ முறையில் அணுகி உதவி கேட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இந்தச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துயரமான காலகட்டத்தில் அவரது குடும்பத்தினரை மேலும் அலைக்கழிக்காதீர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அந்த அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.