AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வந்தது ஈரான் – அமெரிக்கா போர்.. இனி கட்டணம் இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை கடக்கலாம்.. டிரம்ப் அறிவிப்பு!

Iran America War Ends | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வந்த மிக கடுமையான போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

முடிவுக்கு வந்தது ஈரான் – அமெரிக்கா போர்.. இனி கட்டணம் இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை கடக்கலாம்.. டிரம்ப் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2026 07:02 AM IST

வாஷிங்டன், ஜூன் 15 : ஈரான் மற்றும் அமெரிக்கா (Iran And America) இடையே மூன்று மாதங்களாக நீடித்து வந்த கடும் போர் முடிவுக்கு வருவதாக ஈரான் மற்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், ஈரான் – அமெரிக்கா போர் முடிவுக்கு வந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – அமெரிக்கா இடையே மூன்று மாதங்களாக நீடித்து வந்த போர்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது என தொடர்ந்து எச்சரித்து வந்த அமெரிக்கா, பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குலுக்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில், அது மிகப்பெரிய போராக உருவெடுத்தது. குறிப்பாக போரின் முக்கிய அம்சமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இங்கு தான் பெரிய சிக்கல் உருவானது. அதாவது, ஈரான் ஹோர்முஸ் அணையை மூடியதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸை தாண்டி செல்ல முடியாமல் சிக்கி தவித்தன.

இதையும் படிங்க : ஈரான் மீது இன்று கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – டிரம்ப் கடும் எச்சரிக்கை

அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்வை சந்தித்தது. அதுமட்டுமன்றி, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டையும் சந்தித்து வந்தன. இவ்வாறு போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வந்தன. இந்த நிலையில் தான், அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு அளிக்கும் விதமாக ஈரான் மற்றும் அமெரிக்கா போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் பதிவு

இது குறித்து பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் உடனான ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதன்மூலம் இனி ஹோர்முஸ் நீரிணையை எந்தவித கட்டணமும் செலுத்தாமல் கடந்து செல்லலாம். அதே சமயம் அமெரிக்க படைகளும் திரும்ப பெறப்படுகிறது. உலக நாடுகளின் கப்பல்கள் தங்களது இன்ஜின்களை இயக்குங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us