AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கயிறு கட்டாமல் இளம் பெண்ணை தூக்கி வீசிய குழு.. பன்ஜி ஜம்பிங் செய்த பெண் பரிதாப பலி!

Woman Died While Doing Bungee Jumping | பன்ஜி ஜம்பிங் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், பிரேசிலில் பன்ஜி ஜம்பிங் செய்த 21 வயது இளம் பெண் கயிறு கட்டாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு கட்டாமல் இளம் பெண்ணை தூக்கி வீசிய குழு.. பன்ஜி ஜம்பிங் செய்த பெண் பரிதாப பலி!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2026 19:00 PM IST

மனிதர்களாக பிறப்பது மிகப்பெரிய பரிசு, இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகவும், கனவாகவும் உள்ளது. வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்ற பலரும் பல விதமான செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் தான் பல்வேறு சாகச விளையாட்டுக்களும் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. உதாரணமாக ஸ்கை டைவிங், பன்ஜி ஜம்பிங் உள்ளிட்ட விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில், பிரேசிலில் பன்ஜி ஜம்பிங் செய்த இளம் பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்ஜி ஜம்பிங் செய்ததால் இளம் பெண் பலியானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பன்ஜி ஜம்பிங் செய்த இளம் பெண் பரிதாப பலி

பன்ஜி ஜம்பிங் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. உயர்த்தில் இருந்து கால்களில் கயிற்றை கட்டிக்கொண்டு தலைகீழாக குதிக்கும் விளையாட்டு தான் பன்ஜி ஜம்பிங் என அழைக்கப்படுகிறது. இது சற்று ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும், பலரும் இது மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு, வாழ்க்கையில் ஒருமுறையாவது செய்துவிட வேண்டும் என விரும்பி இந்த விளையாட்டை விளையாடுவர். அந்த வகையில் தான், பிரேசிலை சேர்ந்த 21 வயது இளம் பெண் பன்ஜி ஜம்பிங் சாகசம் செய்தபோது அவரது உயிர் பறிபோயுள்ளது.

இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவு.. தொடர் மிரட்டல்.. எப்ஸ்டீன் நட்பு குறித்து பகீர் கிளப்பிய பில் கேட்ஸ்

கயிறு கட்டாமல் இளம் பெண்ணை தூக்கி வீசிய குழு

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பன்ஜி ஜம்பிங் செய்யும் இடத்தில் உள்ள குழுவினர் மூன்று பேர் இணைந்து இளம் பெண் ஒருவரை தூக்கிகொண்டு, கீழே உள்ள 40 அடி பள்ளத்தில் வீசுகின்றனர். வழக்காமாக பன்ஜி ஜம்பிங் செய்யும்போது, பன்ஜி ஜம்பிங் செய்யும் நபரின் கால்களில் கயிறு கட்டப்படும். அந்த கயிற்றின் மூலம் தான் அந்த நபரை மேலே தூக்குவார்கள். அந்த கயிறு தான் பன்ஜி ஜம்பிங் செய்யும் நபர் தரையில் மோதிவிடாமல் பாதுகாக்கும். ஆனால், பாதுகாப்புகான அந்த கயிறு கட்டப்படாததன் காரணமாக பன்ஜி ஜம்பிங் செய்த அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெஞ்சை பதற வைக்கும் அந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow Us