AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்திய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை?

Indian Man Harassed Air Hostess In Flight | தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணம் செய்துக்கொண்டு இருந்த விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இந்திய இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை?
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Mar 2026 08:59 AM IST

சிங்கப்பூர், மார்ச் 18 : தாய்லாந்தில் (Thailand) இருந்து சிங்கப்பூர் (Singapore) நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆகாஷ் என்ற 35 வயது இந்திய இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில், அந்த விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது, விமான பணிப்பெண் ஒருவர் பயணிகளுக்காக உணவு மற்றும் குடிநீர் வழங்க்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த இந்திய இளைஞர் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பயணிகளுக்கு உணவு பரிமாறிய பணிப்பெண்ணின் அந்த இந்திய இளைஞர் ஆகாஷ் திவாரி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவரை எச்சரித்துவிட்டு அது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில், விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கியதும், அங்கு தயாராக இருந்த அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : ’உயிரோடு இருக்கிறேன்.. 10 விரல்தான் இருக்கு’ – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவலர்கள்

பணிப்பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அந்த இளைஞர் தான் அத்தகைய செயலை செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், சிங்கப்பூர் சட்டத்தின்படி, விமான பணிப்பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் அல்லது கடுமையான பிரம்படி தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக கூறும் ஈரான்!

இந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 26, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்தபோது விமான பணிப்பெண்ணுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us