India – Pakistan Ceasefire : இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம்.. ஷெபாஸ் ஷெரிஃப் கூறியது என்ன?
Shehbaz Sharif Speech to Country People | இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று ( மே 10, 2025) போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அது குறித்து தனது நாட்டு மக்களிடையே வீடியோ மூலம் உரையாற்றியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாகன் பார்க்கலாம்.

பாகிஸ்தான், மே 11 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) அமலுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அது குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், தனது நாட்டு மக்களிடம் “நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்” என வீடியோ வாயிலாக உரையாற்றியுள்ளார். இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக ஷெபாஸ் ஷெரிஃப் தனது நாட்டு மக்களிடையேன் உரையாற்றியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மூலம் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தது. குறிப்பாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்கிய இந்திய அரசு சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொலை செய்தது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்த நிலையில், வானிலே வைத்து பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனை இந்தியா கண்டித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அது பெரிய போராக உருவெடுக்கும் பதற்றம் நிலவியது. ஆனால் நேற்று (மே 11 , 2025) இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – ஷெபாஸ் ஷெரிஃப் கூறியது என்ன?
India के Rafale फेल हो गए – Shehbaz Sharif, PM, Pakistan
Our Attack destroyed Enemy’s Air Bases, & Ammunition. Their Rafale were shot down by us. We have Won”#IndiaPakistanConflict #ShehbazSharif #CeasefireViolation pic.twitter.com/wNO5Z1CGIG
— Durgesh Shukla (@mydurgeshshukla) May 10, 2025
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதியானதை அடுத்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரிஃப், பஹல்காம் தாக்குதலை இந்தியா ஒரு காரணமாக சொல்கிறது. ஆனால் அதில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமே சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்தியா நம் மீது அடிப்படையை இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறது. அவர்களால் முடிந்த அளவுக்கு நம்மீது தாக்குதல் நடத்த முற்பட்டார்கள். அப்பாவி மக்களை தாக்கினார்கள், மசூதிகளை தாக்கி இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுத்தோம். நாம் வரலாறு படைத்திருக்கிறோம் வரலாறு நம்மை நினைவு கூறும் என்று கூறியுள்ளார்.