H1B Visa : எச்1பி விசாவி கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு?

Doctors' Exemption on H1B Visa Fee Hike | அமெரிக்க அரசு சமீபத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கும் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில், இந்த புதிய கட்டண முறையில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என் தகவல் வெளியாகியுள்ளது.

H1B Visa : எச்1பி விசாவி கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு?

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Sep 2025 07:57 AM

 IST

அமெரிக்கா, செப்டம்பர் 24 : அமெரிக்காவில் (America) எச்1பி விசா (H1B Visa) கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்  அதிலிருந்து மருத்துவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க அமெரிக்க அரசு (America Government) திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் இந்த திடீர் விசா கட்டண உயர்வு, இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எச்1பி விசா குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எச்1பி விசாவி கட்டண உயர்வு – மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு?

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்காக அங்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை பயன்படுத்தி ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு பணிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தான் அமெரிக்கா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது எச்1பி விசா கட்டணத்தை சுமார் ஒரு லட்சம் டாலர்களாக மாற்றியது. அது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சமாகும். இந்த கட்டணத்தை எச்1பி விசாவில் பணியாற்றும் ஊழியர்கள் பணி செய்யும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் டிரம்ப் உத்தரவிட்டார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு.. தைவான் அரசு அதிரடி அறிவிப்பு!

மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வரும் அமெரிக்கா

இந்த எச்1பி விசா கட்டணம் குறித்து கூறியுள்ள அமெரிக்கா அரசு, ஏற்கனவே எச்1பி விசா வைத்திருக்கும் நபர்கள் மற்றும் விசா புதுப்பிக்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த புதிய கட்டணம் பொருந்தாது என்று கூறியுள்ளது. மேலும், இது ஒரு முறை மட்டுமே செலுத்தும் கட்டணமாக இருக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில் தான் எச்1பி விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 2025ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்… நேரம் என்ன? இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

எச்1பி விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்க நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்கா பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்க்கொள்ளும் என்று அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால், அமெரிக்க மருத்துவ துறை மிக கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் எச்1பி விசா கட்டணத்தில் மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.