48 மணி நேரத்தில் தெரிய வரும்.. ஈரான் விவகாரம் குறித்து பேசிய டிரம்ப்!
America President Donald Trump Speech | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிக கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் விவகாரம் தொடர்பாக 48 மணி நேரத்தில் தெரிய வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஆகஸ்ட் 05 : ஈரான் மற்றும் அமெரிக்கா (Iran and America) இடையிலான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இன்னும் 48 மணி நேரத்தில் தெரிய வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெள்ளை மாளிகையில் நாள் முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தை
ஈரான் போர் தொடர்பாக நாள் முழுவதும் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது குறித்து பேசிய டொனால்ட் டிடம்ப், பேச்சுவார்த்தை நல்ல முறையில் முன்னேறி வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : உருகும் பனி.. அபாயம் தரும் 56,000 புதிய ஏரிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை – டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விரைவி உடன்பாடு எட்டப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே சமயம், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ஹோர்முஸ் நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு.. கச்சா எண்ணெய் விலை குறையுமா?
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் தெரிவித்துள்ளார்.