Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : இயற்கையின் அதிசயம்.. ஜப்பானில் தென்பட்ட வெள்ளைநிற திமிங்கலம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ

Rare White Killer Whale : ஜப்பானில் ஒரு அரிய வெள்ளை நிற கில்லர் திமிங்கலம் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த அதிசய காட்சியை லூசிஸ்டிக் ஒர்க்ஸ் என்ற குழு பதிவு செய்துள்ளது. பொதுவாகக் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இத்தகைய திமிங்கலங்கள், அரிதாக வெள்ளை நிறத்திலும் காணப்படும். இந்த வீடியோ தற்போது மக்களை கவர்ந்து வருகிறது.

Viral Video : இயற்கையின் அதிசயம்.. ஜப்பானில் தென்பட்ட வெள்ளைநிற திமிங்கலம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Updated On: 30 Apr 2025 21:46 PM

பொதுவாக இயற்கையில் பெரும் அதிசயங்களும் மற்றும் ஆச்சயர்யங்களும் (Wonders and surprises) நிறைந்துள்ளன. அதில் ஒரு புள்ளியாகத்தான் மனிதர்கள் (Humans) இருக்கிறோம். உலகத்தில் ஒவ்வொரு உயிரினங்களும் அதற்கு ஏற்ற தனித்திறன்களுடன் இருந்து வருகின்றன. அதில் கடலில் வாழும் உயிரினங்கள் (Creatures that live in the sea) என்னென்ன இருக்கிறது என்று கூட, நமக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அந்த விதத்தில் ஜப்பானில் (Japan) போட்டோகிராபர் ஒருவர் அரியவகை கில்லர் வெள்ளைநிற திமிங்கலத்தைக் (Killer white whale) கண்டுபிடித்துள்ளார். அந்த திமிங்கலமானது கூட்டத்துடன் கடலில் துள்ளித்துள்ளிச் செல்லும் காட்சியானது இணையத்தில் மக்களிடையே தீயாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை ஜப்பானின் ஹொக்கைடோ தீவில், லூசிஸ்டிக் ஒர்க்ஸ் என்ற குழுவினர்கள் இந்த அரியவகை திமிங்கலத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த வீடியோவானது பலரையும் கவர்ந்து வருகிறது. இயற்கையில் இவ்வாறு ஒரு அதிசயம் இருக்கிறதே எனப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இந்த வகை திமிலங்கள் மற்ற வகை திமிங்கலத்தைப் போல் இல்லாமல் மிகவும் வித்தியாசமாகச் சுறாக்களைப் போல் காட்சியளிக்கும்.

அதன் காரணமாகத்தான் இதற்கு கில்லர் சார்க் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இந்த திமிங்கிலங்கள் பொதுவாகக் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த வீடியோவில் தென்பட்ட திமிங்கலமானது முழுமையாக வெள்ளி நிறத்தில் இருக்கிறது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.

இணையத்தில் பயனர்களை கவரும் அந்த வீடியோ :

இந்த வீடியோவில், பல கில்லர் திமிங்கிலங்கள் கடலின் மேல் மட்டத்தில் துள்ளிக் குதித்து விளையாடி வருகின்றன. அதை சாதாரணமாகப் படம்பிடித்த ஜப்பான் போட்டோகிராபருக்கு பெரும் அதிர்ச்சி. அந்த திமிங்கலங்களில் ஒரு அரியவகை வெள்ளை நிற திமிங்கலம் தென்பட்டுள்ளது. அந்த திமிங்கலமானது முழுதாக தெரியாவிட்டாலும், அதன் முதுகு முழுவதும் வெள்ளை நிறத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

அரியவகை வெள்ளைநிற திமிங்கலத்தை இணையத்தில் பலரும் அதிசயமாகப் பார்த்து வருகின்றனர். இந்த வெள்ளை நிற திமிங்கலமானது சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறிவருகின்றனர். தற்போது இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

வீடியோவின் கீழ் பயனர்களின் கருத்துக்கள் :

இணையத்தில் வைரலாக இந்த வீடியோவானது பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கான லைக்குளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “நானும் முதல் முறையாக வெள்ளைநிற கில்லர் திமிங்கலத்தை பார்க்கிறேன், பாருங்கள் இயற்கை எவ்வளவு அதிசயமானது என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் ‘அந்த திமிங்கலம் உண்மையானதா, பார்த்தால் அவ்வாறு தெரியவில்லை. ஆனால் இவ்வாறு திமிங்கலங்கள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...