Viral Video : நீச்சல் அடித்துக்கொண்டு மொபைல் பயன்படுத்தும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Woman Uses Smartphone While Swimming | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் நீச்சல் அடித்துக்கொண்டு மொபைல் போனை பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் மிக சுலபமாக தெரிய வருகிறது. அதாவது, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் தங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி தங்களை சுற்றி நடைபெறும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. அந்த வகையில், பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டே மொபைல் போனை பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டே மொபைல் போனை பயன்படுத்தும் பெண்
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை, பிடித்த நேரங்களில் செய்து வருகின்றனர். அந்த வகையில், பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டே மொபைல் போனை பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : அமெரிக்க் வீதியை ஆக்கிரமித்த இந்திய கடைகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நீச்சல் குளம் ஒன்றில் சிலர் நீச்சல் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுடன் பெண் ஒருவரும் நீச்சலடிக்கிறார். அந்த பெண் மற்றவர்களை போல் இல்லாமல் மொபைல் போனை பயன்படுத்திக்கொண்டு மொபைல் போனை பயன்படுத்துகிறார். பின்பக்கம் நீச்சல் அடித்தபடியே ஏதோ மெத்தையில் படுத்துக்கொண்டு நீச்சல் அடிப்பதை போல அவர் நீச்சல் அடிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : நாய் கடித்ததை தட்டி கேட்ட பெண்.. கன்னத்தில் அறைந்த உரிமையாளர்.. ஷாக் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்த தங்களது கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.