ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – போலீஸ் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ

Viral Video : சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இளைஞர் ஒருவர் ஓடும் காரின் முன் நின்ற படி ரீல் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் - போலீஸ் செய்த சம்பவம் - வைரலாகும் வீடியோ

கார் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட இளைஞர்

Published: 

29 Aug 2025 22:36 PM

இன்ஸ்டாகிராமில் (Instagram) பிரபலமடைய இளைஞர்கள் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர். இதன் காரணமாக சமீபகாலமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹாபூர் மாவட்டத்தில் ஓடும் ஸ்கார்பியோ காரில் ஒருவர் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கிளிப் பாக்பத் காவல் நிலைய எல்லைக்குள் வரும் ஒரு நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் வைரலான பிறகு, போலீசார் ஓட்டுநர் மீது விரைவான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்தனர்.

ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்

வைரலாகும் வீடியோவில் ஒருவர் முன்பக்க கதவுகள் இரண்டையும் திறந்து வைத்து ஸ்கார்பியோவை ஓட்டுவதைக் காணலாம். பின்னர் அவர் ஓட்டுநர் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் வீலை விட்டுவிட்டு கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியே செல்கிறார். கார் ஓடுவதை பொருட்படுத்தாமல் அதன் பானட்டில் ஏறி அங்கேயே நிற்கிறார். ஸ்கார்பியோவுக்கு அருகில் சென்ற மற்றொரு காரில் இருந்து இந்த வீடியோ படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலரும் இளைஞரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஸ்டைலாக ஓட்டும் 72 வயது இந்திய பெண் – வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

 

கார் பறிமுதல்

இந்த ஆபத்தான ஸ்டண்ட் செய்ததற்காக ஓட்டுநர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹாபூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ரூ.30,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!

ஹாபூர் மாவட்டத்தில், ஓடும் ஸ்கார்பியோ காரின் பானட்டில் ஒருவர் ஏறி ஸ்டண்ட் மற்றும் ரீல்களை நிகழ்த்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஹாபூர் காவல்துறை உடனடியாக இந்த விஷயத்தைக் கண்டுபிடித்து, ஸ்கார்பியோ காரின் ஓட்டுநரை கைது செய்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அவருக்கு ரூ.30,500 அபராதம் விதிக்கப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இது போன்ற சாகசங்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.