Viral Video : பள்ளி மாணவர்களின் லஞ்ச பாக்சில் மேகி, சிப்ஸ், சீஸ் பால்ஸ்.. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!
School Students Lunch Box Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பள்ளி மாணவர்கள் சிலர் தங்களது மதிய உணவுக்கு மேகி, சீஸ் பால்ஸ் ஆகியவற்றை கொண்டு வந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில கோபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இன்னும் சில வீடியோக்கள் சமூகம் குறித்த பார்வை, மக்களின் மனநிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். இவ்வாறு இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் பேசுபொருளாவதும் உண்டு. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பேசுபொருளாக மாறியுள்ளது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளி மாணவர்களின் லஞ்ச் பாக்சில் மேகி, சிப்ஸ்
மனிதர்களுக்கு உணவு மிக முக்கிய மற்றும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. நல்ல சத்தான உணவை சாப்பிடும்போது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் சென்று சேரும். எனவே தினசரி உணவில் சத்தான காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பெரியவர்களுக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். குழந்தைகள் வளரும் பருவத்தில் உள்ள நிலையில், அவர்களுக்கு தினசரி சத்தான உணவு வழங்குவது மிகவும் அவசியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சிறுத்தையுடன் போட்டியிட்ட பிரபல யூடியூபர்.. இணையத்தில் பேசுபொருளான வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Saddest video I have seen this week
The video is staged or not, this is true in many households. Give good nutrition to your kids pic.twitter.com/YIpyxfbRPT
— Vineeth K (@DealsDhamaka) January 12, 2026
குழந்தைகளுக்கு மேகி, நூடுல்ஸ், சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட கொடுப்பது அவர்களுக்கு விஷத்தை கொடுப்பதற்கு சமம் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் சிலர் தங்களது மதிய உணவுக்கு மேகி, சிப்ஸ், சீஸ் பால்ஸ் உள்ளிட்ட உணவுகளை எடுத்து வந்திருந்த வீடியோ வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.