Viral Video : துபாயின் சாலையில் ஓடிய மனித வடிவிலான ரோபோட்.. வியந்து பார்த்த பொதுமக்கள்!

Humanoid Robot Spotted in Dubai | நிறுவனங்களில், ஆய்வு கூடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் துபாயின் சாலையில் மனித வடிவிலான ரோபோட் ஓடிக்கொண்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : துபாயின் சாலையில் ஓடிய மனித வடிவிலான ரோபோட்.. வியந்து பார்த்த பொதுமக்கள்!

வைரல் வீடியோ

Published: 

07 Aug 2025 23:22 PM

உலக அளவில் தொழில்நுட்பம் (Technology) மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் புதிய புதிய படைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் துபாய் சாலையில் மனித வடிவிலான ரோபோட் (Humanoid Robot) ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்பெல்லாம் இந்த மனித வடிவிலான ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடும். ஆனால், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ரோபோ சாலைகளில் சுற்றித் திரிகிறது.

துபாய் சாலையில் ஓடிய மனித வடிவிலான ரோபோ

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு வடிவங்களில் பரினாம வளர்ச்சி அடைந்துள்ளது. ரோபோடிக் திறன், செயற்கை நுண்ணறிவு என அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி தொழில்நுட்பம் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் மிக முக்கிய மைல் கல்லாக உள்ளதுதான் ரோபோடிக் திறன். இதன் மூலம் மனிதர்கள் செய்ய கூடிய செயல்களை ரோபோட்டுக்களை வைத்தே செய்து முடித்துவிட முடியும். ஆரம்பகாலத்தில் இது நம்ப முடியாததாக இருந்தாலும், தற்போது பல உலக நாடுகளில் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு பதிலாக ரோபோட்டுகளை பணியில் வைத்துள்ளனர். அந்த அளவு மிகப்பெரிய தாக்கத்தை இந்த ரோபோட்டுக்கள் ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க : காதல் ஜோடியுடன் குழந்தையை போல் கொஞ்சி விளையாடிய குட்டி யானை.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் ரோபோட்டின் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் துபாயின் சாலையில் ரோபோட் ஒன்று ஓடுகிறது. அந்த ரோபோட் மனிதர்களை போலவே ஓடுகிறது. அதனை ஒரு நபர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிக்கொண்டே பின்னால் செல்கிறார். அவர் ரோபோட்டை இயக்க இயக்க அது வேகமாக முன்னோக்கி ஓடுகிறது. இவை அனைத்தையும் சாலையில் காரில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் டாக்டர் செய்த செயல்.. குவியும் பாராட்டு!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த ரோபோ துபாயில் வேலை தேடி அலைகிறது போல என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், இந்த ரோபோட் மாரத்தான் போட்டிக்காக தயாராகி வருகிறது என்று கூறியுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.