AC : குளிர் காலத்தில் ஏசியை ஹீட்டராக பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
Turn AC Into Heater Within a Minute | பலரும் ஏசியை வெப்பத்தின் போது குளிர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏசியை பயன்படுத்தி குளிர் காலத்தில் வெப்பத்தை உருவாக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் ஏசி பயன்படுத்துகின்றனர். கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக பலரும் ஏசியை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக குளிர் காலம் வந்துவிட்டது என்றால் ஏசியை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். ஆனால், ஏசி என்பது வெயில் காலத்தில் மற்றும் பயன்படுத்தப்படும் சாதனம் அல்ல. குளிர் காலத்தில் அறையின் வெப்பத்தை அதிகரிக்கவும் ஏசியை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குளிர் காலத்தில் வெப்பத்தை அதிகரிக்க ஏசி பயன்படுத்தலாம்
வெயில் காலத்திலும், அதிக வெப்பத்தின் போதும் அறை குளிர்ச்சியாக இருக்க ஏசியை பயன்படுத்தவை போலவே அறை அதிக குளிர்ச்சியாக இருக்கும்போது அதனை சற்று வெப்பமானதாக மாற்றவும் ஏசியை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு உங்களது ஏசி அந்த அம்சத்தை கொண்டுள்ளதா என்பது கட்டாயமாக உள்ளது. அதாவது உங்களது ஏசியில் Heat Mode அல்லது Reverse Cycle Function ஆகிய அம்சங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களால் உங்கள் ஏசியை குளிர் காலத்தின் போது ஹீட்டராக பயன்படுத்த முடியும். இதற்காக நீங்கள் தனியாக பணம் செலவு செய்து ஹீட்டர்களை வாங்க வேண்டிய கட்டாயம் இருக்காது.
இதையும் படிங்க : உங்கள் பிரிட்ஜ் கூலிங்க் ஆகவே இல்லையா.. இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்.. உடனே செக் பண்ணுங்க!
ஏசியை ஹுட்டராக மாற்றுவது எப்படி – சிபிள் ஸ்டெப்ஸ் இதோ
- உங்கள் ஏசி ரிமோட்டில் உள்ள ஹீட் பட்டனை அல்லது சிம்பிளை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உங்கள் ஏசியின் வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் ஆக செட் செய்ய வேண்டும்.
- இந்த அம்சத்தை ஆன் செய்த பிறகும் உங்களுக்கு குளிர்ந்த காற்று தான் வரும்.
- ஹீட் மோடை ஆன் செய்த 1 முதல் 2 நிமிடங்களில் அறைக்கு வெப்பமான காற்றும் வர தொடங்கிவிடும்.
இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராமில் வந்தது டூடுல் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி உங்களது ஏசியை இரண்டு நிமிடங்களில் ஹீட்டராக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் உங்கள் ஏசியை ஹீட்டராக பயன்படுத்தும் போது வெப்பநிலை 27 டிகிரி செல்சியசுக்கு மேல் வைக்காமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



