அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது Vivo X300 மற்றும் Vivo X300 Pro!
Vivo X300 and X300 Pro Smartphones Launched | விவோ நிறுவனம் தனது எக்ஸ் 200 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தது. இந்த நிலையில், தற்போது விவோ எக்ஸ் 300 மற்றும் விவோ எக்ஸ் 300 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

விவோ எக்ஸ் 300. விவோ எக்ஸ் 300 ப்ரோ
சீனாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் விவோ, இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. விவோ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ எக்ஸ் 300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ் 300 ப்ரோ (Vivo X300 Pro)ஆகிய ஸ்மார்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீனாவில் அறிமுகமானது விவோ எஸ்க் 300 மற்றும் எக்ஸ் 300 ப்ரோ
விவோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு விவோ எக்ஸ் 200 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Vivo X200 Series Smartphones) அறிமுகம் செய்து வந்தது. இந்த நிலையில், தற்போது எக்ஸ் 300 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தான் இந்த விவோ எக்ஸ் 300 மற்றும் எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50 மெகாபிக்சல் சாம்சங் ஜேஎன்1 செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பை போலவே திரட்ஸிலும் வந்தது Community.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
vivo X300, X300 Pro launched in China🇨🇳
📲 6.31″ | 6.78″ 1.5K BOE 120Hz LTPO OLED Display
💾 MediaTek Dimensity 9500 (3nm) SoC
📷 50MP Main + 200MP Telephoto + 50MP UW Rear Cameras
🤳 50MP Front Camera
🔋 6040 | 6510 mAh Battery
⚡90W Wired | 40W Wireless Charging
⚙️Android 16,… pic.twitter.com/uO3U5F8k4Y— TrakinTech (@TrakinTech) October 13, 2025
விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போனின் மிக குறைந்த வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.54,700-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உயர்ந்த வேரியண்ட் ஆன 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.72,900-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 5ஜி நெட்வொர்க்கால் உங்க போன் பேட்டரிக்கு ஆபத்தா? உண்மை என்ன?
விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனின் மிக குறைந்த வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உயர்ந்த வேரியண்ட் ஆன 16 ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,03,200-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.