நீங்கள் டிஜி லாக்கர் பயன்படுத்துகிறீர்களா? மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை

Digi Locker fake alert : போலி செயலிகள் உங்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது. பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அந்த செயலி உண்மையானதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 

நீங்கள் டிஜி லாக்கர் பயன்படுத்துகிறீர்களா? மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Dec 2025 16:17 PM

 IST

ஸ்மார்ட்போன்களில் (Smartphone) முக்கிய ஆவணங்களை பராமரிக்க நாம் பயன்படுத்தும் போலி டிஜிலாக்கர் செயலிகள்  குறித்து இந்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்தப் போலி செயலிகள் உங்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கியுள்ளது. பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அந்த செயலி உண்மையானதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.  தங்கள் ஸ்மார்ட்போன்களில் டிஜி லாக்கர் (DigiLocker) செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு மத்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஆப் ஸ்டோரில் கிடைக்கும் போலி டிஜிலாக்கர் செயலிகள் குறித்து அரசு மக்களை எச்சரித்துள்ளது.

உங்கள் டிஜி லாக்கர் செயலி உண்மையானதா?

இந்தத் தகவல் டிஜிட்டல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு மூலம் பகிரப்பட்டது. பதிவிறக்குவதற்கு முன்பு பயனர்கள் தாங்கள் பதிவிறக்கும் செயலி உண்மையானதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஐயப்ப பக்தர்களை குறி வைத்து நடக்கும் மோசடி.. கேரளா போலீசார் எச்சரிக்கை!

பலர் ஏற்கனவே தங்கள் ஸ்மார்ட்போன்களில் டிஜிலாக்கர் செயலியை வைத்திருக்கிறார்கள். போலி செயலியில் ஆவணங்களைப் பதிவேற்றியுள்ளீர்களா என்பதைக் கண்டறிய அரசு பரிந்துரைத்த முறையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  இந்தப் போலி செயலிகள் பயனர்களை தவறாக வழிநடத்தி தனிப்பட்ட தரவைத் திருடக்கூடும் என்று அறிவுரை கூறுகிறது. டிஜிலாக்கர் என்பது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அரசு முயற்சியாகும், இது குடிமக்களுக்கான டிஜிட்டல் ஆவணங்களை பராமரிக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது.

டிஜி லாக்கர் செயலி குறித்து மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை

 

இந்த செயலியானது பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி ஆவணங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் போன்ற ஒரிஜினல் ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களை சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. இந்த முக்கியமான ஆவணங்கள் போலி செயலியில் பதிவிறக்கம் செய்யப்பட்டால், பிரைவசி மற்றும் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை நீங்கள் எளிதாக கற்பனை செய்யலாம்.

இதையும் படிக்க : சிம் கார்டு ஆக்டிவாக இல்லை என்றால் இந்த செயலிகளை பயன்படுத்த முடியாது.. அரசு போட்ட முக்கிய ரூல்ஸ்!

இதுதான் உண்மையான செயலியின் அடையாளம்

நாம் பயன்படுத்தும் டிஜிலாக்கர் உண்மையானதா என கண்டறிய சில தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி,

  • அதிகாரப்பூர்வ செயலியின் பெயர்: டிஜிலாக்கர் (DigiLocker)
  • பயன்பாட்டின் அதிகாரப்பூர்வ டெவலப்பர்: தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD), மத்திய அரசு
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.digilocker.gov.in.

மேலே குறிப்பிட்ட பெயர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி