இந்த செயலிகள் உங்களை உலவு பார்க்கலாம்.. உஷாராக இருங்கள்!
Beware of Using These Three Apps In Your Smartphone | பெரும்பாலான நபர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஏராளமான செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த சில செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை பயனர்கள் எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் அனைத்து தேவைகளுக்கும் தனித்தனி செயலிகள் பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகள் வேலையை எளிதானதாக மாற்றி, நேரத்தை மிச்சம் செய்ய பயனுள்ளவையாக இருந்தாலும், அவற்றில் சில ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக சில செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் நாம் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் மூலம் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இலவச விபிஎன்
உலக அளவில் பெரும்பாலான மக்கள் இந்த இலவச விபிஎன் – ஐ பயன்படுத்துகின்றனர். இணையத்தில் இருந்து தங்களது தகவல்களை பாதுகாப்பதாகவும், தரவுகளை மறைப்பதாகவும் நினைத்துக்கொண்டு பலரும் இந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் இந்த செயலிகள் உண்மையாகவே மனிதர்களின் தரவுகளை பாதுகாப்பது இல்லை. அவை விளம்பரம் உள்ளிட்ட தேவைகளுக்காக தனிமனிதர்களின் தரவுகள் மற்றும் அடையாளங்களை நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றன.
இதையும் படிங்க : கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்!
தேவையற்ற செயலிகள்
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்களிலேயே டார்ச், கிளீனர் உள்ளிட்ட செயலிகள் உள்ளன. ஆனால், சிலர் அதற்காக தனி செயலிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த பயனரின் தகவல்கள் மற்றும் தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இத்தகைய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தாமல் இருப்பது உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படாமல், தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : விரைவில் வாட்ஸ்அப்பில் வர உள்ள கட்டண முறை.. அதிர்ச்சியில் பயனர்கள்!
பியூட்டி கேமரா செயலிகள்
பெரும்பாலான பொதுமக்கள் இடையே பியூட்டி கேமரா பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவர்கள் தங்களது புகைப்படம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த செயலிகள் மூலம் அதனை பயன்படுத்தும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இத்தகைய செயலிகளை பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.