டிசிஎஸ் வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்கிய பெண்.. மாதம் ரூ.3.5 லட்சம் வருமானம்!
Woman Achieved Financial Security with Candle Business | குருகிராமை சேர்ந்த பெண் ஒருவர் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு சிறியதாக மெழுகுவர்த்தி தொலை ஒன்றை தொடங்கியுள்ளார். தற்போது அந்த தொழில் மூலம் மாதம் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.
பொருளாதார பாதுகாப்பு (Financial Security) என்பது ஆண்களுக்கு மட்டுமன்றி, பெண்களுக்கும் மிகவும் அவசியமானதாக உள்ளது. அதற்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், பெரும்பாலான பெண்களால் தங்களது திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு வேலை செய்ய முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. இத்தகைய சூழலில் தான், சுயமாக சம்பாதிக்க வேண்டும் என பல பெண்கள் சுயமாக சிறு தொழில் செய்ய தொடங்குகின்றனர்.
அவ்வாறு, வீட்டில் சிறியதாக தொடங்கிய தொழில் மூலம் பெண் ஒருவர் மாதத்திற்கு ரூ.3 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார். இந்த நிலையில், யார் அந்த பெண், என்ன தொழில் மூலம் இவ்வளவு வருமானம் ஈட்டுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசிஎஸ் வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்கிய பெண்
முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடாதா என பலரும் போராடிக்கொண்டு இருக்கும் வேலை, பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய பெண் தனது டிசிஎஸ் வேலையை உதறிவிட்டு சுயமாக தொழில் தொடங்கியுள்ளார். அந்த தொழிலை அவர் வெறும் ரூ.11,000-ல் தொடங்கியுள்ளார். ஆனால், நாளாடைவில் நல்ல வளர்ச்சியை கொடுத்த அந்த தொழில் மூலம் தற்போது லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.




இதையும் படிங்க : தங்கம் விலை சரிவு: நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் – என்ன காரணம்?
கணவரின் உந்துதல் காரணமாக தொழில் தொடங்கிய பெண்
குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ருதி குந்தன். இவர் சுமார் 7 ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் 2023 ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்தபடி, போஹோலேட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தனது கணவர் வழங்கிய உந்துதளின்படி, வீட்டில் இருந்தே சுயதொழில் செய்யும் முயற்சியை அவர் கையில் எடுத்துள்ளார். ஆரம்பத்தில் அவர் மெழுகு வர்த்திகளை தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : புதிய தோற்றத்தில் மஹிந்திரா XEV 9e .. தேதி இதுதான்.. புது அப்டேட் என்ன எதிர்பார்க்கலாம்?
அதன் பிறகு லட்டு வடிவிலான மெழுவர்த்திகள் தொடங்கி, பல புதுமையான வடிவங்களில் மெழுவர்த்திகளை தயாரிக்க தொடங்கியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் துபாய்க்கு அனுப்புவதற்காக சுமார் 7000 மெழுகுவர்த்திகளை அவர் தயாரித்துள்ளார். இதுதான் அவரின் முதல் மிகப்பெரிய ஆர்டர் ஆகும். இவ்வாறு படிப்படியாக தனது தொழிலை ஸ்ருதி வளர்த்துள்ளார். தற்போது அவரது நிறுவனம் மாதத்திறு சுமார் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறது. இதுவே பண்டிகை காலம் என்றால் சுமார் ரூ.10 முதல் 12 லட்சம் வரை வருமானம் பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.