7,000 mAh பேட்டரி.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன்!
Realme 16 5G Smartphone Introduced In India | ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் தனது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன்
இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக உள்ளது தான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி மற்றும் டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. அட்டகாசமான பல அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 05, 2026 முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வங்கி கணக்கு காலியாகலாம்… ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ரியல்மி 16 5ஜி – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
When everything heats up,
you need something that stays calm.
6050mm² VC Cooling on #realme16 5G keeps things cooler and smoother.
Starting from ₹28,999/-*Pre-book now!#AIPortraitStar
Know more:https://t.co/Q9dfBZeCWHhttps://t.co/tYvtOuB21s pic.twitter.com/hJnf9hxJT8
— realme (@realmeIndia) April 3, 2026
இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் Full HD + AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியேடெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் உடன் 12ஜிபி LPDDR4X RAM அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 256 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Un Read Chat Summary.. விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!
இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 60 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.31,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.36,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.