7,500 mAh பேட்டரியுடன் மார்ச் இறுதியில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

One Plus 15 Smartphone Will Launch With 7,500 mAh Battery | ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த புதிய படைப்பான ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன், 2026 மார்ச் இறுதிக்குள் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது 7,500 mAh பேட்டரி உடன் அறிமுகமாக உள்ளது உறுதியாகியுள்ளது.

7,500 mAh பேட்டரியுடன் மார்ச் இறுதியில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன்

Updated On: 

08 Mar 2026 17:56 PM

 IST

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக ஒன்பிளஸ் (OnePlus) உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், விரைவில் ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போனை (OnePlus 15 T Smartphone) அறிமுகம் செய்வதற்காக ஒன்பிளஸ் தயாராகி வருகிறது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள்

ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் 2026, மார்ச் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 13 டி ஸ்மார்ட்போன்களை போலவே இந்த ஒன்பிளஸ் 15 டி சீரீசிலும் உயர் ரக ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஸ்டிக்கர் சஜஷன்.. இனி வாட்ஸ்அப்பில் டைப் பண்ணாலே ஸ்டிக்கர் வரும்.. ஐபோன் பயனர்களுக்கு அசத்தல் அம்சம்!

இந்த ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போனில் 6.32 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கும் என்றும், இதில் பயோமெட்ரிக் ஆத்தண்டிகேஷனுக்காக (Biometric Authentication) அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் (Ultrasonic Fingerprint Scanner) ஆகியவை இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7,500 mAh பேட்டரி அம்சம், 100 வாட்ஸ் வயர்டு மற்றும் 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குவால்கம் ஸ்னாப்டிராகன் உடன் வரும் ஒன்பிளஸ் 15 டி

இந்த ஒன்பிளஸ் 15 டி ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் அம்சத்தை கொண்டு இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் 15 டி அல்லது ஒன்பிளஸ் 15 எஸ் என எப்படி அறிமுகம் செய்யும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் போது தான் அது குறித்த முழு தகவல்கள் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு