வாட்ஸ்அப்பில் மோசடிகளை தடுக்க புதிய அம்சம் – மெட்டா அறிவிப்பு
WhatsApp's Anti-Scam Tools : வாட்ஸ்அப்பில் மோசடி நெட்வொர்க்களுடன் தொடர்புடைய 68 லட்சம் கணக்குகளை மெட்ட நீக்கியுள்ளது. இந்த நிலையில் மோசடி கணக்கை பயனர்கள் முன் கூட்டிய அறிந்துகொள்ளும் விதமாக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மோசடிகளிடம் சிக்காமல் தவிர்க்க முடியும்.

மாதிரி புகைப்படம்
மெட்டாவின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) உலக அளவில் மோசடி நெட்வொர்க்குடன் தொடர்புடைய 68 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளது. இந்த நிலையில் பயனர்கள் இதுபோன்ற மோசடிகளை சிக்காமல் இருக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மெட்டா (Meta) நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, வாட்ஸ்அப் குழுக்கள், தென் கிழக்கு ஆசியாவிலுள்ள மோசடி குழுக்கள் வாட்ஸ்அப் பயனர்களிடம் பிரபலங்களின் பெயர்கள் அல்லது அதிக வருவாய் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும், பயனர்கள் புகார் அளிக்கும்போது மட்டுமல்லாமல் முன்கூட்டியே மோசடி கணக்குகளைக் கண்டறிந்து செயலிழக்க செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடும் நபர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மெட்டா, ஓபன் ஏஐ மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றைப் பயன்படுத்தி கம்போடியாவில் இயங்கிய ஒரு மோசடி நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்ஜிபிடியில் வாட்ஸ்அப் லிங்க்குகளை உடைய தகவல்கள் அளிக்கப்பட்டன. பின்னர் டெலிகிராம் மூலம் டிக்டாக் வீடியோக்களுக்கு லைக் செய்யும்படி பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இறுதியாக ஒரு போலியான கிரிப்டோ மூதலீட்டில் பணம் செலுத்த சொல்லியிருக்கின்றனர்.
இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்
பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்கள்
வாட்ஸ்அப் தற்போது புதிய பாதுகாப்பு அம்சங்களை பரிசோதனை முறையில் கொண்டு வந்துள்ளது.
- அதன் படி இனி புதிய ஒரு குரூப்பில் இணைந்தால் அவரைப் பற்றிய முழு தகவல்களும் காட்டப்படும்.
- மேலும் ஒரு குரூப்பில் இருந்து வெளியேற Chat-ஐ திறக்காமலேயே வெளியேறமுடியும்.
- நம் காண்டாக்டில் இல்லாத நபர்கள் மேசேஜ் அனுப்பும் போது அவரைப் பற்றிய தகவல்கள் காட்டப்படும்.
இது நாம் மோசடிகளில் சிக்காமல் இருக்க நமக்கு பெரிதும் உதவும். மேலும் இனி பண வாய்ப்பு, புது நண்பர், முலீட்டுத் திட்டங்கள் போன்ற சந்தேகத்துக்கிடமான மெசேஜ்களைப் பார்த்தால், அதற்கு பதிலளிக்கும் முன் அது உண்மையா என ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கலாம். ஒருமுறை நாம் பதிலளிக்கத் தொடங்கினால் அதில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம். காரணம் அவர்கள் பெரிய நெட்வொர்க் மூலம் இயங்குபவர்கள். சில விநாடிகளில் நம்மிடம் இருந்து முக்கிய தகவல்களை பெற முடியும்.
இதையும் படிக்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் ஒருவர் டெலிட் செய்த குறுஞ்செய்தியை சுலபமாக படிக்கலாம்.. எப்படி தெரியுமா?
இனி காண்டாக்ட்டில் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை புறக்கணிக்கவும், சந்தேகத்துக்கிடமான லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் முதலீடு தொடர்பான அறிவுரைகளை ஏற்க வேண்டாம். மோசடி என தெரிந்தால் உடனடியாக வாட்ஸ்அப்பில் ரிப்போர்ட் செய்யவும்.