Google Maps : கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமாகியுள்ள புதிய அட்டகாசமான அம்சங்கள்.. என்ன என்ன?
Google Map New Features | கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் செயலியை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய பயனர்களுக்கு சில அட்டகாசமான புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக கூகுள் (Google) நிறுவனத்தின் மேப்ஸ் (Maps) செயலி உள்ளது. தெரியாத இடங்களுக்கு மற்றும் இதுவரை செல்லாத இடங்களுக்கு செல்லும்போது பெரும்பாலான பொதுமக்கள் இந்த கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் நிலையில், பயனர்களுக்கு பயனளிக்க கூடிய பல அட்டகாசமான அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மேப்ஸ் செயலியில் வந்த புதிய அம்சங்கள்
கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் அவ்வப்போது சில அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், தற்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஜெமினி ஏஐ
கூகுள் மேப்ஸ் செயலி தற்போது ஜெமினி ஏஐ-ஐ (Gemini AI) நேரடியாக ஒருங்கிணைக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் தங்களது தொலைபேசியை தொடாமலே உரையாட முடியும்.




போக்குவரத்து அப்டேட்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள் ஆகியவற்றை குறித்து பயனர்களுக்கு அப்டேட் வழங்குகிறது.
அவதார்
இருசக்கர வாகன ஓட்டி பயனர்களுக்காக கூகுள் மேப்ஸ், அவதார் (Avatar) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் பயனர்கள் கிளாசிக் பை, ஸ்போர்ட்ஸ் பைக் என எட்டு நிறங்களில் உள்ள அவதார்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஐபோன் Vs ஆண்ட்ராய்டு.. இரண்டில் எது பாதுகாப்பானது?.. ஷாக் கொடுத்த ஆய்வு முடிவுகள்!
9 இந்திய மொழிகள்
கூகுள் மேப்ஸ் தற்போது மொத்தம் 9 இந்திய மொழிகளில் வழிகாட்டும் வசதியை கொண்டுள்ளது.
மெட்ரோ ரயில் டிக்கெட்
பயனர்கள் தங்கள் நகரங்களில் கூகுள் மேப்ஸ் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்துக்கொள்ளும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லேண்ட்மார்க்ஸ்
கூகுள் மேப்ஸ் செயலி இப்போது சிக்னல்கள் மற்றும் ஸ்டாப் சைன்கள், அருகில் உள்ள உணவகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் பிரபலமான கட்டடங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்டும்.
இதையும் படிங்க : Google Maps : கூகுள் மேப்ஸ்-ல் வரும் முக்கிய அம்சம்.. இனி இதற்கு கவலை இல்லை!
தடைகளை தெரிவிக்கலாம்
கூகுள் மேப்ஸ் செயலி தடைகளை தெரிவிப்பதை மேலும் எளிதாக்கியுள்ளது. அதாவது, சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது, அந்த பகுதியில் போக்குவரத்து சீராக இல்லை ஆகிய தகவல்களை பயனர்கள் தெரிவிக்கலாம்.