இன்வர்டர் ஏசி vs கன்வர்டெபிள் ஏசி: எது மின் செலவை குறைக்கும்? எது சிறந்த குளிர்ச்சி தரும்?
Inverter AC vs Convertible AC : மார்கெட்டில் கிடைக்கும் பல்வேறு மாடல்கள் காரணமாக, சரியான ஏசியை தேர்வு செய்வது மக்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். குறிப்பாக இன்வர்டர் ஏசி மற்றும் கன்வர்டெபிள் ஏசி ஆகியவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்

மாதிரி புகைப்படம்
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசி விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் மார்கெட்டில் கிடைக்கும் பல்வேறு மாடல்கள் காரணமாக, சரியான ஏசியை தேர்வு செய்வது மக்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். குறிப்பாக இன்வர்டர் ஏசி மற்றும் கன்வர்டெபிள் ஏசி ஆகியவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இந்த இரண்டு வகை ஏசிகளில் மின் சேமிப்பு மற்றும் குளிர்ச்சி அவற்றின் செயல்முறை மற்றும் பயன்பாடு ஒன்றுக்கொன்று வேறுபடும். இந்த கட்டுரையில் 2 வகை ஏசிகளில் உள்ள வித்தியாசம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்வர்டர் ஏசி என்றால் என்ன?
இன்வர்டர் ஏசி என்பது அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப கம்பிரசரின் வேகத்தை தானாக மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டது. சாதாரண ஏசிக்கள் போல அடிக்கடி ON/OFF ஆகாமல், தொடர்ந்து இயங்கி வெப்பநிலையை சமநிலையாக வைத்திருக்கிறது. இதில் மின் நுகர்வு குறைவு, ஒரே மாதிரியான குளிர்ச்சி, குறைந்த சத்தம், நீண்ட நேர பயன்பாடு ஆகிய நன்மைகள் கொண்டது. அறையின் வெப்பநிலை குறைந்ததும், கம்பிரசர் வேகம் குறைவதால் மின் நுகர்வு குறைகிறது.
இதையும் படிக்க : கோடைகாலத்தை விட குளிர்காலத்திலேயே ஏசியினால் மின் கட்டணம் அதிகரிக்குமா? – காரணம் என்ன?
கன்வர்டெபிள் ஏசி என்றால் என்ன?
கன்வர்டெபிள் ஏசி என்பது குளிர்ச்சி தரும் திறனை பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொண்டது. அதாவது, நீங்கள் தேவைக்கேற்ப குளிர்ச்சி அளவை கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக அதிக வெப்பம் அல்லது அதிக பேர் உள்ள அறை என்றால் அதற்கு ஏற்ப ஹை மோட் பயன்படுத்த முடியும். அதே போ இரவு நேரம் அல்லது குறைவான நபர்கள் வசிக்கும் அறை என்றால் லோ மோட் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும் என்பதால் மின் பயன்பாட்டை குறைக்க முடியும். மேலும் சூழல்களுக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க : டவர் கூலர் vs பெர்சனல் கூலர் vs டவர் கூலர் – வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
மின் சேமிப்பில் எது சிறந்தது?
- இன்வர்டர் ஏசியை பொறுத்தவரை பயன்பாட்டுக்கு ஏற்ப கன்வர்டர் வேகத்தை மாற்றி மின்சாரத்தை சேமிக்க முடியும். அதே நேரம் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் வெப்ப நிலைக்கு ஏற்ப ஏசியை பயன்பாட்டை கட்டுப்படுத்தி மின்சாரத்தை சேமிக்க முடியும்.
- இதன் மூலம் நீங்கள் ஆட்டோமேட்டிக்காக மின் சேமிப்பை விரும்பினால் அதற்கு இன்வர்டர் ஏசி சிறந்தது. அதே நேரம் நீங்கள் சூழலுக்கு ஏற்பட ஏசி பயன்பாட்டை கட்டுப்படுத்தி மின்சாரத்தை சேமிக்க விரும்பினால் அதற்கு கன்வர்டெபிள் ஏசி சிறந்தது.
- நீண்ட நேர பயன்பாடு, சத்தம் குறைவாக இருக்க வேண்டும், தானாக செயல்படும் வசதி போன்ற தேவைகளுக்கு இன்வர்டர் ஏசி சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
- அறையில் உள்ள நபர்களை பொறுத்து ஏசியின் மோடை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தால் அதற்கு கன்வர்டபிள் ஏசி சிறந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வீடுகளில் ஹால் மற்றும் லிவிங் ரூம் போன்றவற்றுக்கு இந்த வகை ஏசிசிறந்ததாக கருதப்படுகிறது.