இந்தியாவில் ரூ.90,000 கோடியாக உயர்ந்த தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு.. ஆய்வு கூறுவது என்ன?
India's New UPI Record | இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். அதன்படி, ஜனவரி மாதத்தில் ரூ,75,000 கோடியாக இருந்த தினசரி பண பரிவர்த்தனை தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.90,000 கோடியாக அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை (Money Transaction) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் யுபிஐ பண பரிவர்த்தனை சதவீதம் கனிசாமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளுக்கான யுபிஐ பண பரிவர்த்தனை ரூ.90,000 கோடியாக உயர்ந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை அபார வளர்ச்சி அடைந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ பண பரிவர்த்தனை
டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா மிக வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இணைய சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சேவை தான் யுபிஐ பண பரிவர்த்தனை. யுபிஐ செயலிகளை பயன்படுத்தி நொடி பொழுதில் ஒருவர் மற்றொருவருக்கு பணம் அனுப்புவது, பணம் பெறுவது, இருப்பு பரிசோதனை செய்வது உள்ளிட்ட சேவைகளை பெறலாம். இதன் காரணமாக இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இதையும் படிங்க : அக்டோபர் 1 முதல் UPI-ல் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.. NPCI திட்டவட்டம்!
இந்தியாவில் அபார வளர்ச்சி அடையும் யுபிஐ
யுபிஐ மிக விரைவாக செயலாற்றும் நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. யுபிஐ பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு மட்டும் யுபிஐ பரிவர்த்தனை தொகையும், எண்ணிக்கையும் அபார வளர்ச்சி அடைந்துள்ளதாக எஸ்பிஐ-ன் ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள தரவுகள் யுபிஐ பண பரிவர்த்தனை இந்தியாவின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டதை உணர்த்துகின்றன.
இதையும் படிங்க : UPI : யுபிஐ மூலம் பணம் பெறுவது எப்படி?.. சிம்பிள் & பாதுகாப்பான ஸ்டெப்ஸ் இதோ!
ரூ.75,000 கோடியில் இருந்து ரூ.90,000 கோடியாக உயர்ந்த பண பரிவர்த்தனை
2025, ஜனவரி மாதத்தின் தினசரி யுபிஐ பண பரிவர்த்தனையின் அளவு ரூ.75,734 கோடியாக இருந்துள்ளது. இதுவே 2025, ஜுலை மாதத்தில் தினசரி யுபிஐ பண பரிவர்த்தனையின் அளவு ரூ.80,919 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே 2025, ஆகஸ்ட் மாதத்தில் தினசரி யுபிஐ பண பரிவர்த்தனையின் அளவு ரூ.90,446 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது வெறும் 8 மாதங்களில் மட்டும் தினசரி யுபிஐ பண பரிவர்த்தனையின் அளவு சுமார் ரூ.20,000 கோடி வரை அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை உணர்ந்தும் விதமாக உள்ளது.