Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Instagram : இந்த ஒரு ஆப்ஷன் போதும்.. ஸ்க்ரீனை ஸ்க்ரோல் செய்யாமலே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்க முடியும்!

Watch Instagram Reels without Scrolling | இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் பார்க்கும் அம்சத்தை பயன்படுத்தும்போது ஸ்க்ரோல் செய்ய வேண்டும். இந்த நிலையில், ஸ்கிரீனை ஸ்க்ரோல் செய்யாமலே ரீல்ஸ் பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Instagram : இந்த ஒரு ஆப்ஷன் போதும்.. ஸ்க்ரீனை ஸ்க்ரோல் செய்யாமலே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்க முடியும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Mar 2025 11:35 AM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாக உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம் செயலி உரையாடல்களை மேற்கொள்வதற்கு மட்டுமன்றி, பொழுதுபோக்கிற்கும் மிகவும் சிறந்ததாக உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் மெசேஜிங்அம்சம் (Messaging), வீடியோ (Video), ரீல்ஸ் (Reels) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்க பயன்படுத்தும் அசத்தல் அம்சம்

இன்ஸ்டாகிராம் செயலியில் இத்தகைய பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், அதில் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் விரும்பமானது ரீல்ஸ் தான். பாடல்களுக்கு உதடு அசைவு கொடுப்பது, நடனமாடுவது, நகைச்சுவை காட்சிகளை நடிப்பது என பல வகையான வீடியோக்கள் இந்த ரீல்ஸ் அம்சத்தில் அடங்கும். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்குக்கு என பிரத்யேகமாக இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்யும் பட்சத்தில், அதனை தொடர்ந்து வரிசையாக பல ரீல்ஸ்கள் வந்துக்கொண்டே இருக்கும்.

இந்த நிலையில், ஒரு ரீல்ஸ் முடிந்துவிட்டால் அடுத்த ரீல்ஸை பார்ப்பதற்கு, பார்த்து முடித்த ரீல்ஸை மேலே தள்ள வேண்டும். இல்லையென்றால் பார்த்த ரீல்ஸ் வீடியோவே மீண்டும் மீண்டும் வரும். இந்த நிலையில் தான், ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனை தொடாமலே ரீஸ்களை ஸ்க்ரோல் (Scroll) செய்யும் அம்சம் இன்ஸ்டாகிராமில் உள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்க்ரோல் செய்யாமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது எப்படி?

  • அதற்கு முதலில் இன்ஸ்டகிராம் செயலியின் செட்டிங்ஸுக்கு (Settings) செல்ல வேண்டும்.
  • அதில் உள்ள அம்சங்களை ஸ்க்ரோல் செய்யும் பட்சத்தில் Accessibility அம்சம் இருக்கும்.
  • அந்த அம்சத்தை கிளிக் செய்து, Voice Control ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும்.
  • அங்கு Create New Command என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் குரலில் Next என்று சொல்லிவிட்டு, Run Custom என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு, New Command-க்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஸ்க்ரோல் ஆகும் திசையில் உங்கள் விரலை ஸ்லைட் செய்வதை போல அசைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, வலது பக்கத்தில் மேலே உள்ள Save என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, மாற்றத்தை பதிவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி, செட்டிங்கிஸ்-ல் மாற்றம் செய்வதன் மூலம், இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோல் செய்யாமலே Next என கூறி மிக சுலபமாக ரீல்ஸ் பார்க்கலாம். அதிக நேரம் ஸ்மார்ட்போனை ஸ்க்ரோல் செய்யும் நபர்களுக்கு கை விரல்களில் வலி அல்லது வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தகை சிக்கல் உள்ளவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.