UPI : யுபிஐ மூலம் பணம் பெறுவது எப்படி?.. சிம்பிள் & பாதுகாப்பான ஸ்டெப்ஸ் இதோ!
Receive UPI Payments via QR Code | யுபிஐ மூலம் பணம் அனுப்புவதை போல யுபிஐ மூலம் பணம் பெறும் வசதியும் உள்ளது. இந்த நிலையில், யுபிஐ செயலியில் கியூஆர் கோடு பயன்படுத்தி பணம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கையில் பணம் வைத்து செலவு செய்யும் பழக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனை தேவைகளை யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். யுபிஐ பண பரிவர்த்தனை மிக விரைவானதாகவும், எளிதானதாகவும் இருக்கும் நிலையில் இது பலருக்கும் மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில், யுபிஐ-ல் கியுஆர் கோடு (QR – Quick Response Code) ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல கியூஆர் கோடு மூலம் பணம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பல மடங்கு அதிகரித்த யுபிஐ பண பரிவர்த்தனை
இந்தியாவில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்தியாவின் கடைகோடி கிராமம் முதல் முழுமையான வளர்ச்சி அடைந்த பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் பரவலாக யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. யுபிஐ 1 நிமிடத்திற்குள்ளாக பண பரிமாற்றம், வங்கி கணக்கு இருப்பு சோதனை, வங்கி விவரம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க : UPI : இந்தியாவில் அசுர வளர்ச்சி அடையும் யுபிஐ.. ஒரே நாளில் 707 மில்லியன் பண பரிவர்த்தனை!
கியூஆர் கோடு மூலம் யுபிஐ-ல் பணம் பெறுவது எப்படி?
- யுபிஐ-ல் ஒருவரின் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல, கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் பெறவும் முடியும்.
- அதற்கு முதலில் உங்களது யுபிஐ செயலிக்கு செல்ல வேண்டும்.
- அதில் வலது பக்கத்தில் மேலே கொடுகப்பட்டுள்ள உங்கள் பெயரின் முதல் எழுத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதற்குள் சென்றதும் வலது பக்கத்தில் உங்கள் பெயருடன் கூடிய கியூஆர் கோடு தோன்றும்.
- அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் கியூர் கோடு இருக்கும் பகுதிக்கு அது உங்களை அழைத்துச் செல்லும்.
- அதனை உங்களுக்கு பணம் அனுப்பும் நபரிடம் ஸ்கேன் செய்ய கூறும் பட்சத்தில், உங்கள் கணக்குக்கு மிக சுலபமாக பணம் அனுப்பலாம்.
இதையும் படிங்க : UPI : ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் Cashback.. ஆண்டுக்கு ரூ.7,500.. பெறுவது எப்படி?
மொபைல் எண் டைப் செய்து பணம் அனுப்புவது, வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி பணம் அனுப்புவது ஆகியவை சற்று நேரம் எடுக்கும் பட்சத்தில் இந்த அம்சம் மூலம் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.