உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

Phone Safety Guide : ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டது. வங்கி விவரங்கள், யுபிஐ செயலிகள் என நம்மை பற்றிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நம் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

மாதிரி புகைப்படம்

Published: 

19 Apr 2026 20:14 PM

 IST

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. நமது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், புகைப்படங்கள் அனைத்தும் மொபைலில் சேமிக்கப்படுகின்றன. ஹேக்கிங் மற்றும் ஸ்பையிங் போன்ற அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், நம் முக்கிய தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக யுபிஐ செயலிகள், வங்கி செயலிகள் போன்றவற்றை கண்காணித்து நம் பணம் திருடு போக வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் உங்கள் மொபைலை யாரோ கண்காணித்து வருவதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சில முக்கிய அறிகுறிகள் மூலம் அதனை தெரிந்து கொள்ளலாம்

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

  • வழக்கத்தை விட நம் மொபைல் பேட்டரி அடிக்கடி சார்ஜ் குறைந்தால் பின்னணியில் ஏதோ தெரியா செயலிகள் இயங்கிக் கொண்டிருக்கலாம். குறிப்பாக அது ஸ்பை சாஃப்ட்வேராக கூட இருக்கலாம். இது தான் நம் போன் வேறு யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்பதற்கான முதல் அறிகுறி. எனவே வாங்கி ஒரு வருடத்திற்குள் இருக்கும் போனில் இந்த பிரச்னை இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
  • பெரும்பாலும் நம் அதிகமாக இணடர்நெட் பயன்படுத்தாத காலத்தில் நம் மொபைல் டேட்டா காலியானால், நம் போனில் தகவல்கள் வேறு யாருக்கோ ரகசியமாக அனுப்பப்படுகிறது என்பதை உறுதி செய்கிறது. உங்கள் டேட்டா விரைவில் காலியாவது தெரிந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

இதையும் படிக்க : ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து கவலை இல்லை.. வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அம்சம்!

  • நம் இன்ஸ்டால் செய்யாத செயலிகள் அல்லது பிற செயலிகளில் இருந்து நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வந்தால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை குறிக்கும். எனவே நம் மொபைலுக்கு வரும் மெசேஜ்கள் மற்றும் நோட்டிஃபிகேஷனை தவிர்க்க கூடாது.
  • நம் போன் பேசும்போது அடிக்கடி விசித்திரமான சத்தம் வந்தால், தேவையில்லாமல் எதிரொலித்தால் அது நம் போன் கண்காணிக்கப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • மேலும் நம் போனை பயன்படுத்தாத போதும் நம் போன் சூடாகவே இருந்தால், அதன் பின்னணியில் சில செயலிகள் இயங்குவதை குறிக்கும். மேலே சொன்ன அறிகுறிகளில் குறைந்தது 3 பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் போன் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அது காட்டுகிறது.

இதையும் படிக்க : லேப்டாப் வாங்கபோறீங்களா? இது தெரியாவிட்டால் உங்கள் பணம் வீணாகலாம்

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • தேவையில்லாத, பயன்படுத்தாத செயலிகளை நீக்குவது நல்லது.
  • அவ்வப்போது ஏர்பிளேன் மோடில் போடுவது நம் வெளியில் இருந்து நம் போனை தொடர்பு கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும்.
  • இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற முக்கிய செயலிகளின் பாஸ்வேர்ட்களை அடிக்கடி மாற்றுங்கள்.
  • மொபைலில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமாக அமையும். இதனால் நம் போனை அடிக்கடி அப்டேட் செய்வது மிகவும் நல்லது.
  • நம் போனில் நல்ல ஆண்டிவைரஸ் செயலிகளை இன்ஸாடால் செய்து அடிக்கடி ஸ்கேன் செய்யலாம்.
  • ஆதார், பேன், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..