இனி சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்க முடியாது – மத்திய அரசு அதிரடி திட்டம்

Fake Accounts Crackdown: சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் படி இனி சமூக வலைதளங்களில் புதிதாக கணக்கு துவங்க KYC முறை அமல்படுத்தப்படவுள்ளது.

இனி சமூக வலைதளங்களில் போலி கணக்கு துவங்க முடியாது - மத்திய அரசு அதிரடி திட்டம்

மாதிரி புகைப்படம்

Published: 

26 Mar 2026 17:11 PM

 IST

இந்தியாவில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் மூலம் செயல்படும் சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளது. அதன் படி,  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் கேமிங் மற்றும் டேட்டிங் செயலிகளிலும் KYC சரிபார்ப்பை கட்டாயமாக்குவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் நடைமுறைக்கு வரும் KYC சரிபார்ப்பு முறை

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இனி சமூக வலைதளங்களில் புதிய கணக்கு துவங்கும் நபர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இது வங்கிகள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் KYC முறையைப் போன்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.  இதன் மூலம் போலி கணக்குகளை உருவாக்குவது குறையும் என்றும், இதனால் சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் வெகுவாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ஸ்மார்ட் வாட்ச் வாங்க போறீங்களா?.. அதற்கு முன்னாடி இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

சமீப காலமாக சமூக லைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி மோசடி, ஆன்லைன் ஸ்டாக்கிங், தனிப்பட்ட தகவல் திருட்டு, பெண்களுக்கு ஆன்லைன் மூலம் தொந்தரவு அளிப்பது, அனுமதி இல்லாமல் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வது, ஏஐ மூலம் தவறாக சித்தரிக்கப்பட்ட படங்களை பகிர்வது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால், இந்த பிரச்னையை சரி செய்ய நாடாளுமன்ற குழு சில கடுமையான விதிகளை பரிந்துரைத்தது.

டேட்டிங் செயலிகளிலும் குற்றங்களை தடுக்க புதிய திட்டம்

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும். KYC சரிபார்ப்பு முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகே சமூக வலைதளங்களில் கணக்கு துவங்க அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவபர்களை உடனடியாக அடையாளம் காணமுடியும். இதனால் தவறான செயல்கள் குறையும். மேலும் டேட்டிங் மற்றும் கேமிங் செயல்களிலும் மோசடிகளை தடுக்க இந்த திட்டம் உதவும்.

இதையும் படிக்க : இனி இன்ஸ்டாகிராமில் End-to-end Encryption அம்சம் இருக்காது.. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு?

இந்த திட்டம் வந்தால் போலி கணக்குகள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் ஏதுவாக இருக்கும். மேலும் சமூக வலைதளங்கள் நம்பகத்தன்மையுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் மாறும் என கூறப்படுகிறது.

Follow Us
Related Stories
ஏசி வாங்கப்போறீங்களா? இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க – இல்லனா வருத்தப்படுவீங்க!
கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு – ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் – மத்திய அரசு அறிவிப்பு
வாட்ஸ்அப்பில் காட்டினாலே போதும்… மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுத்து செல்பவர்களுக்கு தளர்வு – தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு
விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
15 நிமிடங்களில் தானாகவே மறையும் குறுஞ்செய்திகள்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்!
மொபைல் எண் இல்லாமலேயே அழைப்புகள்.. 92 மொழிகள்.. உள்நாட்டு மெசஞ்சரை கொண்டு வந்த அனுவாதினி ஏஐ!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..