WhatsApp : வாட்ஸ்அப் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிடும் அரசு?.. உண்மை என்ன?.. PIB கூறுவது இதுதான்!

WhatsApp Monitoring Guidelines | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நிலையில், வாட்ஸ்அப் செயலிகள் குறித்து அரசு புதிய வழிமுறைகளை வெளியிட உள்ளதாகவும், அதன்படி பயனர்களின் உரையாடல்கள் மற்றும் குரல் செய்திகளை அரசு சேகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp : வாட்ஸ்அப் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிடும் அரசு?.. உண்மை என்ன?.. PIB கூறுவது இதுதான்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Aug 2025 19:43 PM

இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை பயன்படுத்தும் நிலையில், மத்திய அரசு வாட்ஸ்அப்பில் சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளதாகவும்,  அதன் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட உரையாடல்கள், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவை அரசால் சேமிக்கப்படும் என தகவல் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த அரசு இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் குறித்து பரவும் செய்தி குறித்து அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் உரையாடல்களை அந்த நிறுவனம் பயனர்களுக்கு தெரியாமல் நோட்டமிடுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். ஆனால் வாட்ஸ்அப் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் பயன்பாடு குறித்து அரசு சில விதிகளை அறிமுகம் செய்துள்ளதாகவும், அந்த விதிகளின் படி வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் குரல் குறுஞ்செய்திகள் அரசால் சேகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஃபேஸ்புக், எஸ்க் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அரசாங்க நிறுவனங்களால் கண்காணிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்

வாட்ஸ்அப் குறித்து பரவும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அரசு

வாட்ஸ்அப் குறித்து இவ்வாறு பல விதமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு அரசின் உண்மை கண்டறியும் அமைப்பான PIB Fact Check மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு, வாட்ஸ் அப் குறித்து அரசு புதிய விதிமுறைகளை கொண்டுவர உள்ளதாக  வெளியாகும் செய்தியை நீங்கள் கண்டிருப்பீர்கள். அது முற்றிலும் தவறானது. அத்தகைய விதிமுறைகள் எதையும் அரசு வெளியிடவில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு போலியாக பரவும் செய்திகள் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களையும் அந்த பதிவில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.