UPI : ஜூன் முதல் மிக விரைவாக மாறப்போகும் யுபிஐ.. NPCI சொன்ன முக்கிய தகவல்!
NPCI Cuts Transaction Times to 10 Seconds | யுபிஐ செயலிகள் ஏற்கனவே மிக வேகமாக பண பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தப்படும் நிலையில், தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் பண பரிவர்த்தனைகளுக்கான கால அளவை மேலும் குறைக்க உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

இந்தியாவை பொருத்தவரை கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் யுபிஐ பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக கட்டமைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மக்களும் மிக வேகமாக டிஜிட்டல் செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்தியாவை, டிஜிட்டல் இந்தியாவாக கட்டமைக்க யுபிஐ முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் முதல் நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
யுபிஐ செயலிகள் குறித்து அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள NPCI
யுபிஐ மூலம் மிக விரைவாக பணம் அனுப்ப முடியும் என்பதால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். யுபிஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், NPCI (National Payment Corporation of India) அதில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அசத்தலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி UPI மூலம் மிக விரைவில் பண பரிவர்த்தனை செய்யலாம்
UPI transactions to get faster from June 16, 2025: NPCI
Read full article: https://t.co/fU3K0RzRXF#UPI #NPCI pic.twitter.com/eVUeE68QnB
— The Tatva (@thetatvaindia) May 2, 2025
யுபிஐ செயலிகள் ஏற்கனவே மிக விரைவாக பண பரிவர்த்தனை செய்ய பயன்படுகின்றன. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஜூன் 2025 முதல் யுபிஐ செயலிகள் மூலம் மிக விரைவாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவித்துள்ளது. யுபிஐ-ல் ஏற்கனவே விரைவாக பணம் அனுப்ப வசதிகள் உள்ள நிலையில், அதன் கால அளவை தற்போது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் குறைத்துள்ளது.
குறைக்கப்பட்ட கால அளவுகள்
- பரிவர்த்தனை விவரங்களை தெரிந்துக்கொள்வதற்கான கால அளவு 30 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
- பண பரிவர்த்தனை செய்யும் போது அதனை Cancel செய்ய முன்னதாக 30 நொடிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அதற்கு வெறும் 10 நொடிகள் போதும் என என்பிசிஐ கூறியுள்ளது.
- முன்னதாக பணம் அனுப்புவதற்கு மற்றும் பணம் பெறுவதற்கு 30 விநாடிகள் ஆன நிலையில், தற்போது அது வெறும் 10 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ளதை போல பண பரிவர்த்தனைகளுக்கான கால அளவை NPCI குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.