உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க இந்த சில விஷயங்களை பண்ணுங்க!

Smartphone Data Security | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் தான் அனைத்து தகவல்களையும், தரவுகளையும் வைத்துள்ளனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்களை பாதுகாக்க இந்த சில செட்டிங்க்ஸ்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக இருக்க இந்த சில விஷயங்களை பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Mar 2026 13:59 PM

 IST

புதியதாக ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்கியவுடன் பலரும் அதில் என்ன என்ன அம்சங்கள் உள்ளது, ஸ்மார்ட்போன் எப்படி செயல்படுகிறது என்பதில் தான் அதிக ஆர்வம் செலுத்துவர். ஆனால், புதியதாக வாங்கிய ஸ்மார்ட்போனில் செய்ய வேண்டிய மிக முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் பாதுகாப்பை உறுதி செய்வது. நீங்கள் உங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிய நாள் முதலே பாதுகாப்பாக வைத்திருப்பது உங்களது தனிப்பட்ட விவரங்கள், வங்கி விவரங்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்டவற்றை மிகவும் பாதுகாப்பாக இருக்க செய்யும். இந்த நிலையில், உங்கள் புதிய ஸ்மார்ட்போனை பாதுகாக்கும் சில முக்கிய வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிவைஸ் டிராக்கிங்

உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை மேம்படுத்த நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம் தான் இந்த டிவைஸ் டிராக்கிங் (Device Tracking). உங்களது ஸ்மார்ட்போன் திருடு அல்லது தொலைந்துவிட்டது என்றால் அதனை கண்டுபிடிக்க இந்த அம்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  1. அதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் Settings-க்குள் செல்லுங்கள்.
  2. அதில் உள்ள Security என்ற அம்சத்தை கிளிக் செய்யுங்கள்.
  3. பிறகு அதில் உள்ள Find My Device என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இந்த அம்சத்தை ஆன் செய்வதன் மூலம் உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் அதனை லாக் செய்வது, அதில் உள்ள விவரங்களை அழிப்பது உள்ளிட்டவற்றை செய்யலாம்.

இதையும் படிங்க : கிரியேட்டர்களுக்கு பெரிய வாய்ப்பு – ஏஐ பயிற்சிக்காக 15,000 இலவச ஸ்காலர்ஷிப் – மத்திய அரசு அறிவிப்பு

ரிமோட் லாக் மற்றும் ஆஃப்லைன் டிராக்கிங்

ரிமோட் லாக் மற்றும் ஆஃப்லைன் டிராக்கிங் (Remote Lock and Offline Tracking) அம்சம் உங்களது ஸ்மார்ட்போன் திருடுபோனால் அதனை கண்டுபிடிக்க உதவும் மிக முக்கிய அம்சமாகும்.

  • ரிமோட் லாக் : திருடுபோன உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அதனை வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் லாக் செய்யலாம்.
  • ஆஃப்லைன் டிராக்கிங் : உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது அதில் நெட்வொர்க் இல்லை என்றாலும் கூட டிராக் செய்ய முடியும்.

இந்த அம்சம் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கி அதனை உடனடியாக கண்டுபிடிக்க உதவும்.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் காட்டினாலே போதும்… மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுத்து செல்பவர்களுக்கு தளர்வு – தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு

தற்போது அனைவரும் தங்களது ஸ்மார்ட்போனில் அனைத்து ரகசிய மற்றும் முக்கிய தகவல்கள், ஆவணங்களை வைத்துள்ள நிலையில், இந்த சில அம்சங்கள் அவற்றை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்