போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

Cybercrime Alert : நமது ஸ்மார்ட்போன்களில் சில செயலிகளை டவுன்லோடு செய்யும் அவசரத்தில் செயலியின் சில செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கிறோம். பெரும்பாலான செயலிகள் நமது போனின் மைக்கை பயன்படுத்த அனுமதி கேட்கின்றன. இந்த நிலையில் ஒருவருடன் பேசும்போது நமது போனின் இண்டர்நெட் ஆனில் இருந்தால், அதனால் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

போன் செய்யும்போது நெட்டை ஆனில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Jun 2025 21:26 PM

 IST

பொதுவாக ஸ்மார்ட்போன்களின் (Smartphone) 24 மணி நேரம் இண்டர்நெட் ஆன் செய்தே வைத்திருக்கிறோம். தூங்கும் போது கூட அதன் இணைப்பை துண்டிப்பது இல்லை.  இந்த நிலையில் ஒருவருக்கு போன் செய்யும்போது இண்டர்நெட்டை (Internet) ஆன் செய்து வைத்திருக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?  இந்த செயலுக்கு எதிராக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கமான ‘சைபர் தோஸ்த்’ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளது. சைபர் தோஸ்த் பகிர்ந்துள்ள காணொளியில், இண்டர்நெட்டை ஆனில் வைத்திருப்பதன் மூலம், மொபைல் போன் உங்கள் உரையாடல்களை அணுகும் என்று கூறுகிறது.

இண்டர்நெட் ஆனில் இருக்கும்போது போன் பேசினால் ஆபத்தா?

இண்டர்நெட் ஆனில் இருக்கும்போது நாம் போன் பேசினால் நம் உரையாடல்களை போனில் உள்ள செயலிகள் ஒட்டுக்கேட்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் நம் ஸ்மார்ட்போனில் சில செயலிகளுக்கு மைக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கிறோம். ஒரு செயலியை டவுன்லோடு செய்யும்போது சில பெர்மிசன்களை அந்த செயலி கேட்கும். அதில் மைக்கை பயன்படுத்தவும் அனுமதி கேட்கும். நாம் செயலியை டவுன்லோடு செய்யும் வேகத்தில் தெரியாமல் அதற்கு அனுமதி கொடுக்கிறோம். இதுதான் பிரச்னைக்கு காரணம். சில செயலிகள் நமது பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு அதனை விளம்பர நோக்கத்தில் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

எப்படி சரி செய்வது?

உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸில் உள்ள Security and Privacy என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் உள்ள பிரைவசி கண்ட்ரோல் என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். பின் அதில் இருக்கும் Permission Manager என்பதை கிளிக் செய்யவும். அதில் Microphone என்பதில் கிளிக் செய்தால் எத்தனை செயலிகளுக்கு மைக்கை பயன்படுத்த அனுமதி கொடுத்திருக்கிறோம் என்பதைக் காட்டும். அதில் உங்களுக்கு எந்தெந்த செயலிகளுக்கு மைக்கை பயன்படுத்த அனுமதி கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டும் கொடுக்கலாம். மற்றவற்றை நீக்கி விடலாம்.

சைபர் கிரைமின் எச்சரிக்கை வீடியோ

 

கூடுதலாக, நீங்கள் கூகிள் குரோம் வழியாகவும் சரிபார்க்கலாம். இதைச் செய்ய, Google Chrome-ஐ ஓபன் செய்து  மூன்று புள்ளிகள் மெனுவைக் கிளிக் செய்யவும். பின்னர் அதில் Settings என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து எந்தெந்த பயன்பாடுகளுக்கு மைக்ரோஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் பேச்சு ஒட்டுக்கேட்கப்படாமல் தவிர்க்கலாம். காரணம் சில செயலிகள் உங்கள் பேச்சை விளம்பர நோக்கத்தில் பயன்படுத்தக் கூடும்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..