ரூ.25 ஆயிரத்தில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Smartphones Under 25,000 rupees in May 2025 | ஒரு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.15,000 செலவு செய்ய வேண்டும். ஆனால் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களில் சிறப்பு அம்சங்கள் மிக குறைவாகவே இருக்கும். இந்த நிலையில், பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.25 ஆயிரத்தில் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

07 May 2025 18:05 PM

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, பொருட்களை வாங்குவது, பண பரிவர்த்தனை செய்வது என அனைத்து தேவைகளுக்கு ஒரே தீர்வாக ஸ்மார்ட்போன் உள்ளதால் அது பொதுமக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில், அனைவரும் தங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நிலையில் 2025, மே மாதத்தில் ரூ.25,000-க்கும் குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.25,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

சிஎம்எஃப் போன் 2 ப்ரோ

இந்த சிஎம்எஃப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்புகள் உடன் 50 மெகா பிக்சல் டெலி போட்டோ லென்ஸ் (Telephoto Lens) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 5,000 நிட்ஸ் வரை பிரைட்னஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி வசதி உள்ள நிலையில், 33 வாட்ஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நத்திங் போன் 3ஏ

மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்களில் சிறந்த தேர்வாக உள்ளது நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a). இந்த ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்ன்நாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7S Gen 3 Chipset) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 5,000 mAh பேட்டரி அம்சம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

லாவா அக்னி 3 5ஜி

இந்த லாவா அக்னி 5ஜி (Lava Agni 5G) ஸ்மார்ட்போனில் டூயல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300X சிப்செட் (MediaTek Dimensity 7300X  Chipset) அம்சத்தை கொண்டுள்ள நிலையில், 5,000 mAh பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களுடன் ரூ.25,000 என்ற பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.