உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட் காரணமாக ஏற்பட்ட மூளைத் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த இல்மா நதீம் என்ற மாணவி, டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பிஏ முதலாமாண்டு படித்து வந்த இல்மா நதீம், கடந்த சில நாட்களாக கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.