ஜெய்ப்பூரில் உள்ள ஹவா மஹால் அருகே, இரண்டு ரஷ்ய பெண்கள் பிஸியான சாலையை கடக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, பார்ப்பவர்களுக்கு சிரிப்பையும், அதே நேரத்தில் இந்தியாவின் சாலை பாதுகாப்பு குறித்து ஒரு தீவிர விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. வைரலான அந்த வீடியோவில், ஒரு ரஷ்ய பெண் தனது தோழிக்கு இந்திய சாலைகளை எப்படிக் கடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பது போல் காட்சி உள்ளது.