BSNL : வெறும் ரூ.1-க்கு மாதம் முழுவதும் இணைய சேவை.. வரம்பற்ற வாய்ஸ் கால் சலுகையும் உண்டு.. பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு!
1 Rupees BSNL Recharge Plan | சமீப காலமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் பல அசத்தல் அம்சங்களையும், அதிரடி சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் வெறும் ரூ.1-க்கு புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகப்படுத்தின. இதன் காரணமாக அதன் பயனர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களது சிம் கார்டுகளை அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கு மாற்றினர். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட பிஎஸ்என்எல், பல புதிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மூலம் ஏராளமான பொதுமக்களை தன்வசம் இழுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெறும் ரூ.1-க்கு ரீச்சார்ஜ் செய்து மாதம் முழுவதும் 4ஜி இணைய சேவையை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அசத்தல் அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெறும் ரூ.1-க்கு ரீச்சார்ஜ் திட்டம் – பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் தனது 4ஜி இணைய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தபடியாக வெறும் ரூ.1-க்கு ரீச்சார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது ஒரு மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஃப்ரீடம் ஆஃபர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை அனுபவிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் இவ்வளவு குறைந்த விலைக்கு ரீச்சார்ஜ் திட்டம் வழங்கும் நிலையில், இது போட்டி நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Vivo T4R : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?




ரூ.1 ரீச்சார்ஜ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1-க்கான ரீச்சார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் 30 நாட்களுக்கு 4ஜி இணைய சேவையை அனுபவிக்கலாம். இதில் 2ஜிபி அதிவேக டேட்டா, தேசிய ரோம்இங்குடன் இந்தியா முழுவதும் வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அனைத்து சேவைகளும் வெறும் ரூ.1-க்கு கிடைக்கும் நிலையில், இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சோதனை முயற்சியாக ஒரு மாதத்திற்கு இந்த திட்டத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் இணைய சேவை மற்றும் தரத்தை சோதிக்கும் ஒரு வழியாகவும் இது இருக்கும்.
இதையும் படிங்க : Amazon Great Freedom Festival : முன்னணி பிராண்டு இயர்போன்களுக்கு 75% வரை தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை ஆகஸ்ட் 1, 2025 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை மட்டுமே கிடைக்கும். சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.