Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிதம்பரத்தில் பயங்கரம்.. மனைவியை கிண்டல் செய்த இளைஞர்.. கொடூரமாக கொன்ற கணவன்!

Chidambaram Crime News : சிதம்பரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்ப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கிண்டல் செய்த ஆத்திரத்தில், கணவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரத்தில் பயங்கரம்.. மனைவியை கிண்டல் செய்த இளைஞர்.. கொடூரமாக கொன்ற கணவன்!
மாதிரிப்படம்Image Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Apr 2025 15:06 PM

சிதம்பரம், ஏப்ரல் 18:  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கிண்டல் செய்ததால், இளைஞரை, அந்த நபர் வெட்டிக் கொலை செய்துள்ளார். கடலூர் மாவட்டம் மேலமூங்கிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (24). இவரது மனைவி ஐஸ்வர்யா (19). இவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மேலமூங்கிலாடி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். வேலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பால கணேஷ் (22).

மனைவியை கிண்டல் செய்த இளைஞர்

திருட்டு உட்பட பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாலகணேஷ் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு வினோத் குமாரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி வினோத் குமார் வீட்டிற்கு பால கணேஷ் சென்று வந்தார்.

வீட்டில் செல்லும்போது எல்லாம், வினோத் குமாரின் மனைவி அடிக்கடி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது பிடிக்காமல், தனது கணவர் வினோத் குமாரிடம் ஐஸ்வர்யா கூறியுள்ளார். சம்பவத்தன்று கூட, வீட்டிற்கு வந்த பால கணேஷ் , ஐஸ்வர்யாவை கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதனால் கடுப்பான வினோத் குமார், தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறி வருந்தி உள்ளதாக தெரிகிறது. இதனால், பிரச்னையை தீர்ப்பதற்காக, வினோத் குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர், பால கணேஷை அழைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, இதுபற்றி கேட்ட, பால கணேஷிடம் வினோத் குமார் கேட்டிருக்கிறார். அப்போது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தில் பால கணேஷை, வினோத் குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர், உடலை கால்வாயில் வீசிச் சென்றிருக்கிறார்.

கொடூரமாக கொன்ற கணவன்

இதனை அடுத்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பால கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் சிதம்பரம் துணைப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் டி. அகஸ்டின் ஜோசுவா லாமெச் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்தது வினோத் குமார் என்று தெரியவந்தது.

இதனை அடுத்து, அவரை பிடித்து விசாரித்ததில் பால கணேஷை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.  இதனை அடுத்து, வினோத் குமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐந்து பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவியை கிண்டல் செய்ததால், ஆத்திரத்தில் நண்பனை வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்களில் ரீல்ஸ் சர்ச்சை: மரியாதை மீறலா அல்லது சுதந்திரமா?
கோவில்களில் ரீல்ஸ் சர்ச்சை: மரியாதை மீறலா அல்லது சுதந்திரமா?...
நரசிம்ம ஜெயந்தி எப்போது? - இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்களா?
நரசிம்ம ஜெயந்தி எப்போது? - இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்களா?...
இனி மார்க் குறைந்தால் பெயில்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை!
இனி மார்க் குறைந்தால் பெயில்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை!...
அரசியலில் ஈடுபட 100 சதவீதம் தைரியம் வேண்டும்...
அரசியலில் ஈடுபட 100 சதவீதம் தைரியம் வேண்டும்......
இன்று முதல் பெங்களூருவில் 'ஹைவே ஹீரோஸ்' பிரச்சாரம்!
இன்று முதல் பெங்களூருவில் 'ஹைவே ஹீரோஸ்' பிரச்சாரம்!...
டெல்லியை புரட்டி போட்ட மழை.. 4 பேர் பலி.. விமான சேவை பாதிப்பு!
டெல்லியை புரட்டி போட்ட மழை.. 4 பேர் பலி.. விமான சேவை பாதிப்பு!...
புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு...
புகழ் பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறப்பு......
பாம்பன் பாலத்தில் பயணம்.. வரப்போகும் வந்தே பாரத் ரயில் சேவை!
பாம்பன் பாலத்தில் பயணம்.. வரப்போகும் வந்தே பாரத் ரயில் சேவை!...
ஈரோட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி கொலை... நடந்தது என்ன?
ஈரோட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி கொலை... நடந்தது என்ன?...
இந்த முறை டக் அவுட்.. சூர்யவன்ஷியை துரத்தும் அழுத்தம்?
இந்த முறை டக் அவுட்.. சூர்யவன்ஷியை துரத்தும் அழுத்தம்?...
அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்... முடிவை மாற்றும் பெற்றோர்!
அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்... முடிவை மாற்றும் பெற்றோர்!...