அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம்.. தம்பியை சரமாரியாக வெட்டிய கும்பல்.. சிவகாசியில் பயங்கரம்!

Sivakasi Crime News : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த, தம்பியை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, கும்பல் இளைஞர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தள்ளது.

அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம்.. தம்பியை சரமாரியாக வெட்டிய கும்பல்.. சிவகாசியில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட இளைஞர்

Updated On: 

13 Aug 2025 08:18 AM

விருதுநகர், ஆகஸ்ட் 13 : விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டிக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி முனீசுவரி. இவர்களுக்கு வைரம், ஈசுவரபாண்டியன், கணேஷ் பாண்டியன் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில், வெள்ளைச்சாமி குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் குடும்பத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இருகுடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறிலும், மனைவி முனீசுவரி தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், முனீசுவரி, சிவகாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம்

அந்த புகாரின்பேரில், போலீசார் கோல்குமார், அவரது அண்ணன் காத்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளைச்சாமி மகன் ஈஸ்வரபாண்டியனை, கோல்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈஸ்வரபாண்டியனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக சிவகாசி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறது. இந்த கொலை வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் வெள்ளைச்சாமி மற்றும் அவரது மனைவி முனீசுவரி சாட்சியம் அளித்திருந்தனர்.

Also Read : 17 ஆண்டுகள் பகை.. தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி!

இதனை அடுத்து, கணேஷ்பாண்டியன் சாட்சியம் அளிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு எதிராக காட்சியம் சொல்லக்கூடாது என்பதற்கா வெள்ளைச்சாமி குடும்பத்தினருக்கு கோகுல்ராஜ் மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனாலும், வெள்ளைச்சாமி குடும்பத்தினர் இதனை கண்டுகொள்ளவில்லை.

தம்பியை சரமாரியாக கொன்ற கும்பல்

சாட்சியம் அளிக்க தயாராக இருந்தனர். இதனால், கோகுல்ராஜ் கணேஷ் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டார். இந்த சூழலில் தான், கணேஷ்பாண்டியன் 2025 ஆகஸ்ட் 12ஆம் தேதியான நேற்று இரவு வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கோகுல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கணேஷ்பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதில், கணேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை அடுத்து, அவரது குடும்பத்தினர் உடனே அவரது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, கோகுல்குமார், கணேசபாண்டியன், ராஜேஷ், பிரவீன் குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Also Read : கோவை காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை

இதற்கிடையில், கணேஷ் பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். கைதான நால்வரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாட்சியம் சொல்லக் கூடாது என்பதற்காக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.