ராமநாதபுரம்: பிள்ளைகள் முன்பு வீடு புகுந்து பெண் கொலை: குடும்ப மோதலா? வேறு காரணமா?

Woman Brutally Killed: ராமநாதபுரம் மணப்பாடையைச் சேர்ந்த ஜெர்மின், பிரிந்த கணவரிடமிருந்து தனியாக வசித்து வந்தார். முகமூடி அணிந்த இருவர் வீடு புகுந்து ஜெர்மினை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். கணவர் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்: பிள்ளைகள் முன்பு வீடு புகுந்து பெண் கொலை: குடும்ப மோதலா? வேறு காரணமா?

கோப்புப்படம்

Published: 

19 Jul 2025 10:14 AM

ராமநாதபுரம் ஜூலை 19: ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டத்தில் உள்ள சாயல்குடியில் ஜெர்மின் (Jermyn) என்பவர், கணவர் விஜயகோபாலுடன் (husband Vijayagopal) பிரிந்து தனியாக வசித்து வந்தார். வீட்டில் மகன், மகளுடன் இருந்தபோது, இரவு நேரத்தில் முகமூடி அணிந்த இருவர் நுழைந்து அவரை கொலை செய்தனர். விஜயகோபால் உத்தரகாண்டில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜெர்மின் பிற ஆண் நண்பர்களுடன் போனில் அதிகமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர் புகாரின் அடிப்படையில், கணவர் கொலைக்கு பின்னிலிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தகாத உறவு காரணமாகவும், குடும்ப தகராறாகவும் கொலை நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகோபால் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடையைச் சேர்ந்த ஜெர்மின் (36) இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 14 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். விஜயகோபால் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

Also Read: வரதட்சணை கொடுமை.. கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு

ஜெர்மினை கொன்ற முகமூடி அணிந்து வந்த இருவர்

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில், ஜெர்மின் வெட்டுக்காடு வீட்டில் தனது மகள், மகனுடன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, குழந்தைகள் கண்முன் அவரை கூரிய ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: மதுரையில் வரதட்சணை கொடுமை: அடித்து துன்புறுத்திய காவலர் கணவர் கைது

கணவர் வழியாகவே கொலை நடந்திருக்கலாம்?

இதுகுறித்து, ஜெர்மினின் பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் அளித்த புகாரில், ‘‘விஜயகோபால் தான் ஆட்களை வைத்து கொலை செய்து இருக்கலாம்’’ என குறிப்பிட்டுள்ளனர். போலீசார் கூறுகையில், “விசாரணையில், ஜெர்மின் பிற ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசிவந்தது தெரியவந்துள்ளது. இது ஒரு தகாத உறவு சம்பவம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், கணவர் வழியாகவே கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்தனர். இந்த கொலை வழக்கு, குடும்ப மோதலா? இல்லை வேறு காரணமா? என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.