AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?.. குழந்தைகளே விரைவில் வருகிறது ஹேப்பி நியூஸ்!!

அதேசமயம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது. அந்தவகையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான பள்ளி திறப்பு தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேதிகள் குறித்த இறுதி முடிவு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?.. குழந்தைகளே விரைவில் வருகிறது ஹேப்பி நியூஸ்!!
மாதிரிப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 May 2026 10:33 AM IST

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்ப அலை (Heatwave) மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க: “தவெக ஆட்சி நீடிக்க ஸ்டாலின் சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்”.. அமைச்சர் அருண்ராஜ்

இதனிடையே, தமிழகத்தில் வருகிற ஜூன் 1ஆம் தேதி 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், ஜூன் 4ம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வாட்டும் வெயில்:

தகிக்கும் கோடை வெப்பமானது நாடு முழுவதும் மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்திக்கின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 109 டிகிரி வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது.

என்ன மாற்றம் செய்ய பரிசீலிக்கப்படுகிறது?

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வட்டி வதைத்து வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி குழந்தைகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, சிறிய குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளித் திறப்பை மட்டும் தள்ளி வைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அதன்படி, தொடக்கப் பள்ளிகளுக்கான பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க பள்ளி கல்வித்துறை தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு?

அதேசமயம், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது. அந்தவகையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான பள்ளி திறப்பு தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேதிகள் குறித்த இறுதி முடிவு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!

Follow Us