“தவெக ஆட்சி நீடிக்க ஸ்டாலின் சாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்”.. அமைச்சர் அருண்ராஜ்
மத்திய அரசைக் குறிவைத்து பேசிய அவர், வந்தே மாதரத்துடன் தொடங்கி வந்தே மாதரத்துடன் முடிக்கும் கலாச்சாரம் குறித்தும், வலுக்கட்டாயமாக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயலும் ஆதிக்க மனப்பான்மை குறித்தும் சாடினார். இத்தகைய திணிப்புகளைத் தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்கவோ, ஏற்கவோ முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதைய தவெக தலைமையிலான ஆட்சிக்காலம் முழுமையாக நீடிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடவுளை நன்றாக வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும், மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் அனைத்து தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திமுக மற்றும் அக்கட்சியின் செயல் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். திமுக தரப்பில் ‘தவெக-விற்கு பெரும்பான்மை இல்லை, எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழ்ந்து நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று திமுக கூறி வருவதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க: சர்ச்சையான அந்த சிரிப்பு.. பின்னணி இதுதான்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் கீர்த்தனா!
அனைத்து தொகுதிகளிலும் தவெகவே வெல்லும்:
திமுகவினரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அருண்ராஜ், “ஐயா ஸ்டாலின் அவர்களே! தயவுசெய்து கடவுளை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். எப்படியாவது இந்த ஆட்சிக்காலம் நீடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை தப்பித்தவறி மீண்டும் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் தவெகவே வெல்லும்” என்றார். மேலும், தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே பல லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசம் இருந்தது என்றும், மக்கள் திமுகவை அந்த அளவிற்குப் புறக்கணித்து தோல்வியடையச் செய்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு எதிர்ப்பு:
மத்திய அரசைக் குறிவைத்து பேசிய அவர், வந்தே மாதரத்துடன் தொடங்கி வந்தே மாதரத்துடன் முடிக்கும் கலாச்சாரம் குறித்தும், வலுக்கட்டாயமாக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயலும் ஆதிக்க மனப்பான்மை குறித்தும் சாடினார். இத்தகைய திணிப்புகளைத் தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்கவோ, ஏற்கவோ முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.
திமுக-அதிமுக ஒன்றுபட்டன:
தேர்தல் முடிவுக்கு பின்பான நிகழ்வுகளை நினைவுகூர்ந்த அமைச்சர், “தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, தங்களுக்குள் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் திரைமறைவில் கைகோர்த்தன. ‘நான் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை, விஜய் சிஎம் ஆகக் கூடாது’ என்ற ஒற்றை நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூட திமுக தயாராக இருந்தது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை வழக்கு.. பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்.. கடுமையான தண்டனை கிடைக்க உறுதி!
உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம்:
திமுகவின் தோல்வி குறித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “பாஜகவின் வெற்றிக்குக் காரணம் காங்கிரஸ் தான் என உதயநிதி ஸ்டாலின் ஒரு அரசியல் சாணக்கியரைப் போலப் பேசுகிறார். ஆனால், உண்மையில் இந்தத் தேர்தலில் திமுக சந்தித்த மிக மோசமான தோல்விக்கு முக்கிய காரணமே உதயநிதி ஸ்டாலின் தான்” என்று சாடினார். மேலும், உதயநிதி ஸ்டாலின் இருக்கும் வரை தவெகவிற்கு கவலையே இல்லை என்றும், மக்கள் தொடர்ந்து திமுகவை நிராகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.